பக்கம்:பாரதியம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறவுக்கு இடம் இல்லை. உலகத்தைக் கட்டளைக்குள் அடக்கும் போது திமிறுவதையும் கட்டளைகளை விட்டுக் கொடுக்கும்போது குளிர்ந்து பணியாற்றுவதையும் உலகியல் நிலைமைகளில், உறவுப் பிணைப்புகளில் நமக்குள் நாமே சேவகனாய், ஆசிரியனாய், தெய்வமாய், குழந்தையாய் பல வண்ணங்கள் பெறுவதையும் இக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அஞ்சத்தக்கது, அது போலவே கொஞ்சத் தகுந்தது இந்த உலகம், இவற்றை இக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. தொகுத்துச்சொன்னால், பிரபஞ்சம், உலகம், சமூகம் ஆகியவற்றோடு நமக்குள் நாம் கொள்ளும் ஒருமித்த தீவிரமான - உணர்வின், குளிர்ந்த, அழகிய வெளிப்பாடுகளே கண்ணன் பாட்டுக்கள். பாரதி தனக்கு உரிய தன் காலத்து, பிரபஞ்சத்தை, உலகை, சமூகத்தைத் தனக்குள் கண்டு, அவற்றோடு கொள்ளும் உறவின் பல கோலங்களைத் தான்தன் பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கின்றன. இம்முறையில் இப்பாடல்கள், சமகாலத்தன்மை உடையவை. இந்தச் சமகாலமே பாரதியை இயக்கிக் கவிதைப்படுத்தியிருக்கிறது. பாகவதத்தினுள்ளும் பகவத்கீதையினுள்ளும் இருந்த கண்ணன், பாரதிக்குள் இறங்கி வந்திருக்கிறான். புதிய நீதிகள் போதிக்கின்றான். புதிய வேதங்கள், புதிய உறவுகளில் விளைகிறான். இங்கே கண்ணன் குறியீடாகிறான். Myth ஆகிறான். கடைசியாக. 'கண்ணன் பாடலை அணுகுவதற்குரிய கண்ணோட்டத்தில் இது ஒரு தேடல் மட்டுமே. இந்தக் கண்ணோட்டமும் விரிவான ஆய்வுக்கு உரியது. கவிதையைப் பொருள்படுத்துவது, மேற்போக்கிலுள்ள சொற்கள். சொற்றொடர்களில் அல்ல. ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் கான சொற்களைக் கடந்து அப்பால்... உள்ளே செல்லவேண்டும். இருட்செறிவுடைய நெறிக்குள் இப்பயணம் தொடர்ந்தால், ஒளி வெள்ளத்தில் மூழ்கலாம் - அங்கே ஒளி இருந்தால் - கண்ணன் பாட்டில் இந்த ஒளி இருக்கிறது. இந்த ஒளி வெள்ளத்தில் முக்குளித்தவர் புதிய பாடல்களோடும் கரைக்கு வரமுடியும். இதுவரை விவரித்த கண்ணோட்டம் சரி என்றால், உலக இலக்கியத் தரத்தில் பாரதியின் கண்ணன் பாட்டு நிமிர்ந்து நிற்கும். பாரதி எளிதாக மகாகவி ஆகிவிடுகிறான். ఈ్మ 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/40&oldid=817229" இலிருந்து மீள்விக்கப்பட்டது