பக்கம்:பாரதியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் ஜனநாயகக் கவி பாரதிப்பித்தன் மொழிப் பண்டிதர்களிடம் ஒரு பொதுவான போக்கு காணப்படும். ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரே இப்பூமியில் ஒரு பொன்யுகம் தோன்றியிருந்ததுபோலவும், வர வர உலகம் சீரழிந்து கொண்டிருப்பதுபோலவும் கொஞ்சகாலத்தில் உலகம் அழிந்து விடப் போவது போலவும் பேசும் பாங்கு காணப்படும். மன்னராட்சி முறைக்காலத்தை உச்சி மேல் வைத்து மெச்சும் மனப் பான்மையும், இவர்களிடம் உண்டு. தமிழ்நாட்டுப் புலவர்களிடமும், கவிஞர்களிடமும் இந்தப் போக்கு நிரம்ப உண்டு. உண்மையில் பொற்காலம் பூமியில் இனித்தான் தோன்ற வேண்டும். மற்ற நாட்டு மன்னர்களை நோக்க நம் நாட்டு மன்னர்கள் அவ்வளவு கொடுங்கோலர்களாக இல்லை என்பது உண்மையே. ஆயினும் மனித உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த யுகத்தை விட மன்னராட்சி முறைக்காலம் எந்த வகையிலும் உயர்ந்ததாக இல்லை; இருக்கவும் இயலாது. ஜனநாயக யுகத்தை விட சர்வாதிகார ஆட்சி முறை நிலவிய காலத்தில் "சட்டம் ஒழுங்கு” சரியாக இருந்திருக்கும் என்பதும். அமைதியான சூழ்நிலை காணப்பட்டிருக்கும் என்பதும் மெய்யே! 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/41&oldid=817230" இலிருந்து மீள்விக்கப்பட்டது