பக்கம்:பாரதியம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அரண்மனையில் சிலம்பைத் திருடிய கள்வன் என் வீட்டில் இருக்கிறான் என்று ஓடிவந்து பொற்கொல்லன் சொன்னான். அது ஒரு வழக்கு. இந்த வழக்கை முறைப்படி கொலுமண்டபத்தில் அமர்ந்து தான் பதிவு செய்துகொண்டு, விசாரித்து, தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும் பாண்டிய மன்னன். அந்தப்புரத்திற்கு மனைவியைப் பார்க்கப்போகிற போக்கில் ஒரு வழக்கை ஏற்றுக்கொண்டு அதற்குத் தீர்ப்பு வழங்குவது எந்த நீதிமுறையைச் சேர்ந்ததாகவும் இருக்க முடியாது. {{ * - - - கன்றிய கள்வன் கையதாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கு”. என்பது மன்னனது தீர்ப்பு: உத்தரவு. கோவலன்கையில் இருந்த சிலம்பு பாண்டிமாதேவியின் சிலம்புதான் என்று ஊர்க்காப்பாளர் கண்டறிய அவர்களுக்கு என்ன வசதியை மன்னன் செய்து கொடுத்தான். இவ்வளவு பெரிய வழக்கைச் சாதாரண ஊர்க்காப்பாளரிடம் ஒப்படைத்ததே தவறு. அதாவது போகட்டும். ஒப்படைத்த ஊர்க்காப்பாளரிடம் தனது மனைவியின் மற்றொரு சிலம்பையும் தந்து இதற்கு இணையான (இதன் சோடி) சிலம்பு கோவலன் கையில் இருந்தால் அவனைக் கொன்று, கொண்டு வா எனக் கூறியிருந் தாலாவது பொருத்தமாக இருந்திருக்கும். மனித உயிர் சம்பந்தப்பட்ட வழக்கில் இவ்வளவு அலட்சியமாகத் தீர்ப்பு வழங்க முற்பட்டதற்கான துணிவு அவனுக்கு எங்கிருந்து வருகிறது. தீர்ப்பில் தவறு ஏற்பட்டால் அதற்காக அவன் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கவில்லை; விதியின் மீது பழியைப் போட்டு விடலாம் என்ற நிலைதானே! அதுதானே சிலம்பில் நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவன் அவனது தரப்பைப் பற்றிச் சொல்லிக்கொள்ள சிலப்பதிகார காலத்தில் என்ன சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது? ஒன்றுமில்லை. இவ்வளவு பலவீனமான நீதி 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/43&oldid=817233" இலிருந்து மீள்விக்கப்பட்டது