பக்கம்:பாரதியம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நான் ஒரு கவியரசன் நீ ஒரு புவியரசன்” என்ற பாணியிலேயே அவனது கவிதை அமைகிறது. ஜார்மன்னன் வீழ்ச்சியில் அவனடைந்த மகிழ்ச்சி சர்வதேசப் புகழ்பெற்றதாகும். சிவாஜி தன் சைன்யத்திற்குக் கூறியதாக அவன் பாடிய பாடலிலும் மன்னராட்சி முறையை எங்கேயும் உயர்த்திப் பாடவில்லை. அந்த நெடிய பாட்டில் அந்நியராட்சிக்கு எதிரான சுதேசி உணர்வுதான் கொழுந்துவிட்டு எரிகிறது. சேர, சோழ, பாண்டியர் ஆட்சியையோ, வட நாட்டுப் பேரரசு களையோ அவன் பாராட்டவில்லை. அவன் பாராட்டியதெல்லாம் அசோகரின் அருளாட்சியையும், சிவாஜியின் வீரத்தையுமே! இவ்வாறு மன்னராட்சி முறையைப் பாராட்டாதது மட்டுமன்றி அத்தகைய சர்வாதிகாரத்தைப் பாரதி கண்டித்திருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. தருமன் நாட்டை வைத்துச் சூதாடியதை முன்னிட்டு அவனைச் சீச்சி! எனப் பாரதி இகழ்ந்தமை நாடறிந்த செய்தி. மன்னனைப் புறநானூற்று மோசிகீரனார் உயிராகவும், கம்பன் உடலாகவும் போற்ற, பாரதியோ அவனைக் காவற்காரன் என்றது மாபெரும் கருத்துப் புரட்சியே! அதோடு நிற்காமல், ← £ நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல் நரர்கள் என்று கருதார் ஆட்டு மந்தையாமென்று உலகை அரசர் எண்ணி விட்டார் காட்டும் உண்மை நூல்கள் - பலதாம் காட்டினார்களேனும் நாட்டு ராஜநீதி மனிதர் நன்கு செய்யவில்லை ஒரஞ் செய்திடாமே - தருமத்து உறுதி கொன்றிடாமே 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/45&oldid=817235" இலிருந்து மீள்விக்கப்பட்டது