பக்கம்:பாரதியம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோரஞ் செய்திடாமே - பிறரைத்துயரில் வீழ்த்திடாமே ஊரையாளு முறையை - உலகில் ஓர் புறத்துமில்லை சார மற்ற வார்த்தை - மேலே சரிதை சொல்லுகின்றோம்.” என்று பாடி மன்னராட்சி முறைக்கே சூடாகக் கசையடி கொடுத்தி ருப்பதைக் காணலாம். "நாட்டு மாந்தர் - தொடங்கி” “மேலே சரிதை சொல்லுகின்றோம்” . வரையுள்ள பகுதிகள் கதைக்குத் தேவையே இல்லை. ஒரு படைப்பாளி எப்போதும் தன்னை மறைத்துக்கொண்டு கதை உறுப்பினர்களைப் பேசச் செய்வதுதான் இலக்கியமரபு. படைப்பாளி கதைக்குக் குறுக்கே வந்து வாசகனிடம் பேசுவது இலக்கிய மரபுக்கு மாறானது; கதையோட்டத்திற்குத் தடையாய் அமைவது. இதைப் பாரதி உணர்ந்தே இருக்கிறான். "மேலே சரதை சொல்லுகின்றோம் - என்று பாடுகின்றான் பாரதி. இனிமேல் சரிதை சொல்கிறோம் என்றாலே இதுவரை சொன்னது “இடைப்பிறவரல்” என்று பொருளாகவில்லையா? ஆகவே பாரதி இலக்கிய மரபையும் புறக்கணித்து குறுக்கே வந்து வீழ்ந்து பேசுவதற்கு உந்துசக்தியாக விளங்குவது அவனது ஜனநாயக உணர்வே! எனவே பாரதியைத் தமிழ்க் கவிஞர்களுக்குள்ளே முளைத்த முதல் ஜனநாயகக் கவி என்றால் என்ன தவறு இருக்கமுடியும்? 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/46&oldid=817237" இலிருந்து மீள்விக்கப்பட்டது