பக்கம்:பாரதியம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முன்னுரையை இழந்ததனால்... இளங்கம்பன் இறவாத புதுத்தமிழ் நூல்கள் இயற்ற வேண்டும் என்ற உள்ளாசையில் ஒயாக் கடலாக இயங்கியவர் பாரதியார். அவர் ஆக்கிக்குவித்த நூற்களில் எல்லாம் அவரின் அழகார்ந்த முன்னுரைகள் பொன்னுரை களாகவே பொலிவூட்டக் காண்கின்றோம். பகவத்கீதைக்கு அவர் எழுதியுள்ளதான அழகான முன்னுரையைப் படித்துப் படித்துச் சிந்திக்கலாம். சிந்தித்துச் சிந்தித்துப் படிக்கலாம். அவரின் அரும்படைப்புக்களுக்கு அவர் வரைந்தருளிய முன்னுரைகள் பெரிதும் தேவைப்படுவதற்கு அவர் வரைந்தருளிய முன்னுரைகள் பெரிதும் தேவைப்படுவதற்குக் காரணம் அவருடைய இலக்கியங்கள் யாப்பில் மரபையும் நோக்கில் புதுமையையும் கொண்டிருப்பதால் முன்னுரைகள் அந்நூல்களை அணுகுவதற்கும் ஆய்வதற்கும் பெரிதும் வழிகாட்டுகின்றன. அவர் இலக்கியங்களில் குயிற்பாட்டு உயிர்ப்பாட்டாக உணர்ச்சிப் பாட்டாக உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அரும்பாட்டாக அவரின் தனிப்பாடல்களில் நெடும் பாட்டாக உள்ளத்தை நெருடும் சிறு காப்பியமாக நின்றிலங்கக் காண்கின்றோம். பாரதி மறைந்தபின் 1923ல் இந்த இலக்கியம் முதன் முதலில் அச்சேறி உள்ளது. பாரதி பிரசுராலயத்தார் முன்னர் வெளி வந்திருந்த கண்ணன் 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/47&oldid=817238" இலிருந்து மீள்விக்கப்பட்டது