பக்கம்:பாரதியம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் அமுத அலைகளாகவே கவிதைகள் இந்நூலில் குரல் எழுப்பக் காண்கின்றோம். இந்நூலின் இடையில் பாரதியோ மிக அடக்கமாக இரண்டு வரிகளைத் தருகின்றான். இந்த வரிகள் ஒரு முன்னுரையின் சாயலைப்பெற்றிருந்தாலும் முன்னுரையல்ல அந்த வரிகள் பாரதியின் அடக்கத்தையே நமக்குக் காட்டுகின்றன. கற்பனையும் வர்ணனையும் காட்டிக் கதைவளர்க்கும் விற்பனர்தம் செய்கை விதமும் தெரிகிலன்யான் இந்த வரிகள் பாரதியின்ஆற்றலை விளக்கும் வரிகள் அல்ல; காரணம் பாரதியின் வீறார்ந்த கற்பனை வளமும், பொருட்சுவையும், சொற்சுவையும், நகைத்திறனும் தத்துவப் பார்வையும் அழகின் வேட்கையும் இந்நூலில் இழையோடி நிற்பதுபோல் வேறு அவரின் நூல்களில் நாம் காணமுடியாது என்றாலும் இப்பாடல் புலவரின் புதுமைக் கற்பனையா? புதுமை நெடுங்கனவா? அல்லது கட்டுக்கதையா அல்லது அழகுணர்ச்சிக்கு நம்மை அழைத்துச் செல்லும் இலக்கியமா? என்று ஐயத்தை எழுப்பாமல் இல்லை. பாரதியார் இந்நூலில் காலைப் பொழுதிற்குத் தரும் விளக்கத்தை இக்கதைக்குத் தொடர்பு படுத்தும்போது புல்லை நகையுறுத்திப் பூவைவியப்பாக்கி மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிதந்து விண்ணை வெளியாக்கி விந்தைசெயும் சோதியினை காலைப்பொழுதினிலே கண்விழித்தே நான் தொழுதேன் நாலுபுறத்துமுயிர் நாதங்கள் ஓங்கிடவும் இன்பக்கவியில் இயங்கும் புவிகண்டேன் துன்பக்கதையின் தொடருரைப்பேன்....... இவ்வாறு தொடர்கின்றார். இதனால் இந்தக் கதை துன்பக் கதையா? அல்லது இன்பக் கதையா? இத்தனை ஐயங்களும் நமக்கு எழத்தான் செய்கிறது. ஒரு முன்னுரையை இழந்ததனால் இவ்வளவு வினாக் களை நாம் எழுப்ப வேண்டியவர்களாக இருக்கின்றோம். ©

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/49&oldid=817240" இலிருந்து மீள்விக்கப்பட்டது