பக்கம்:பாரதியம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி மண்டலத்துக்காக... பூமண்டலம் முழுவதும் ஒரு பெரிய விழிப்பொன்று வரப் போகிற தென்று முன்னரே உணர்ந்து அதற்காக மகாசக்தியுடன், மாறாத உறுதியுடன் உழைத்த ஒரு மேதை சுப்பிரமணிய பாரதி. குறுகிய காலமே வாழ்ந்து மறைந்த அந்த மகாகவியின் வாழ்க்கை, எழுத்து ஆகியவற்றை நுட்பமான பரிசீலனைக்கு உள்ளாக்குவது அணுவைப் பிளந்து அதன் ஆற்றலைப் பெறுவதைப் போன்றது. அவரைத் துதிப்பது, சகலவிதமான அடிமைத் தனங்களையும் அப்புறப்படுத்தத் தோள்தட்டிப்போராடத்துண்டுவதைப் போன்றது. இத்தகைய முயற்சிதான் இந்த நூல், xx 1982 டிசம்பர் 24, 25, 26ஆகிய நாட்களில் நடைபெற்ற சிவகங்கை பாரதி நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பெற்ற பாரதி மலரில் உள்ள ஒரு சில கட்டுரைகளும் தாமதமாகக் கிடைத்த வேறு சில கட்டுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. - 'ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணும் அருமையான கட்டுரைகளை அளித்த பாரதி ஆய்வாளர்களுக்கும் அன்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். Yor

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/5&oldid=817241" இலிருந்து மீள்விக்கப்பட்டது