பக்கம்:பாரதியம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் படைப்புமையம் நோக்கி... தமிழவன் சுப்பிரமண்ய பாரதி ஒரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு. வெள்ளைக் காரர்களின் இந்தியப் பிரவேசத்திற்குப் பிறகு துண்டு துண்டாகப் பல்வேறு பிராந்திய கலாச்சார முத்திர்ைகளுடன் இருந்து கொண்டிருந்த இந்தியா, தனக்கான பொருளாதார அரசியல் மையப் படுத்தலை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, வெள்ளைக்காரனின் கல்வியையும் தாண்டி ஒரு கருத்துருவத்திற்கு வடிவம் கொடுத்தது. அதன் பெயர் இந்திய தேசிய கருத்துருவம். உள்ளடக்க ரீதியாக இந்த இந்திய தேசிய கருத்துருவம் தனக்குள் தேசிய முதலாளிகளின் பொருளாதார நலனுக்கான குரலைக் கொண்டிருந்ததுபோலவே பிரதானமாக பிராமண சாதீய சடங்காசார சட்டகத்தை இந்திய ஒன்றிப்புக்கான அடையாளக் குரலாகக் கொண்டிருந்தது. இதில் நகர வர்த்தகர்களின் நலன் சார்ந்திருந்தது; அத்வைத மரபு ஒலித்தது. பிரம்மம் இறுதியுண்மையாக பாரதி காண்கிறான். அரவிந்தரிடமும் இப்படிப்பட்ட கருத்து உண்டு. சக்தி, காளி, கண்ணன், முருகன் என்ற தெய்வங்களை உள்வாங்கும் தன்மை உண்டு. தமிழ்மொழியின் தெய்வத்தன்மை, இந்துஸ்தானத்தின் மகிமை இப்படிப்பட்ட சிந்தனைகளும் இருந்தன. சுதந்திரம் தேவியாக உருவக நிலை கொண்டது. பாரதம் பாரதமாதா ஆகியது. 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/50&oldid=817242" இலிருந்து மீள்விக்கப்பட்டது