பக்கம்:பாரதியம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகலே சாமியாராகி விட்டார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மாவாகி விட்டார். பார்ப்பானை ஐயரென்ற காலம் போச்சு என்று சொல்லும் பார்ப்பன எதிர்குரலும் ஒரளவு ஒலிக்கிறது. இங்கு. வங்களாம், மராட்டி, மற்றும் உலகக் கலாச்சாரப் பார்வைகளும் கலந்துள்ளன. மொத்தத்தில் மத, சாதி, பிராந்திய அழுத்தங்களுடனான இந்திய தேசிய கருத்துருவம் ஒன்று எல்லா மொழிகளிலும் பரவியிருக்கிறது. தமிழிலும் இது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கில எதிர் கருத்துருவமாகப் பரவியிருக்கிறது. பல்வித வர்க்க, சாதிய, மத, பிராந்திய சிந்தனா ஒழுங்கமைவின் ஒவ்வொன்றும் பின்னி இறுகிய சட்டகத்தின் பெயர், இந்திய தேசிய கருத்துருவம் சுப்பிரமண்ய பாரதி ஆரம்பகால சமஸ்தான உறவுகளை, அப்பாதிப்பால் எழுதிய பாடல்களை விட்டபிறகு இந்த இந்திய தேசிய கருத்துருவத்துள் தன்னைக் காண்கிறான். இந்தச் சட்டகத்துள், தன்னைக் கண்ட பாரதி தனது கவிதைக் குரலை இச்சட்டகத்தின் பண்புக்குள்ளிருந்து பெறுகிறான். இதனால் பாரதி தனக்கான உலகை நிர்மாணித்து விடுகிறான். சாதி, மதம், பெண்விடுதலை, ஸ்யன்ஸ், ஆங்கில ஆட்சி, ஏசு, ரஷ்ய புரட்சி இவை பற்றி எல்லாம் தனது கருத்துச்சட்டகத்தின் குணத்துடனான சிந்தனைகளை உருவாக்கிவிட முடிகிறது. மரங்களுக்கு ஏன் பச்சை நிறம் என்றால் நந்தலாலாவின் நிறம் பச்சை என்று சொல்கிற பாரதி, ரஷ்ய புரட்சி பற்றிப் பேசுகையில் மாகாளி கடைக்கண் வைத்ததால் ரஷ்யப் புரட்சி வந்தது; ஜார் என்னும் மன்னன் வீழ்ந்தான் என்று புரிந்து கொள்கிறார். பெண் விடுதலை பற்றிச் சொல்லும்போதும் தனது சிந்தனையில் ஏறியுள்ள சட்டக அமைப்புப் பாரதியைப் “பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண்பயனுற வேண்டும். வானகம் இங்கு தென்படவேண்டும்.” என்று சொல்ல வைக்கிறது. பெண் விடுதலையையும் வானகம் தென்படுவதையும் ஒன்றாகவே பார்க்கிறார், பாரதி. அந்திப் பொழுதைப் பற்றிப் பாடுகையில் பாரதிக்குக், “காவென்று கத்திடும் காக்கை - என்றன் கண்ணுக்கினிய கருநிறக் காக்கை 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/51&oldid=817243" இலிருந்து மீள்விக்கப்பட்டது