பக்கம்:பாரதியம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூவித் திரியும் சிலவே - சில கூட்டங்கள் கூடி திசைதோறும் போகும் தேவி பராசக்தி அன்னை - விண்ணில் செவ்வொளி காட்டிப் பிறைத்தலை கொண்டாள்” தேவி பராசக்தியின் வடிவ வர்ணங்களாக இயற்கையின் காட்சி, அந்திப் பொழுதின் மாட்சி போன்றன தெரிகின்றன. காதல் செய்யும் மனைவியைச் சக்தியின் வடிவமாகப் பார்க்கிறார், பாரதி. அந்நிய தேசத்துக் கடவுளான ஏசு, சிலுவையில் அறையப்பட்டதுகூட ஒர் இந்திய மதக் கருத்தின் விளக்கமாய் அமைகிறது. "ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்துயிர்த்தனன் நாளொரு மூன்றில் தேசத்தீர் இதன் உட்பொருள் கேளிர் தேவர் வந்து நமக்குட் புகுந்தே நாசமின்றி நமை நித்தம் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்.” இப்படிப் பார்க்கிற பாரதி, உலகைத் தனது இந்திய மரபு சார்ந்த, மதம் சார்ந்த சட்டகம் வழிக் காண்கிறார் என்பது புரிகிறது. இங்கு இன்னொரு விஷயமும் கவனம் கொள்ளத்தக்கது. இந்திய மரபுச் சட்டகம் பாரதிக்கு ஒரு தடையாக இருக்கவில்லை. ‘என் அறிவில் தெய்வத்தன்மை காணப்படுகிறது. நான் ஒரு தேவனைப் போலே சிந்தனை செய்ய வல்லேன்,” என்கிற பாரதி “தமிழா பயப்படாதே ஊர் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்.” “ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ஜாதி இரண்டெர்ழிய் வேறில்லை என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள். புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளாதே. 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/52&oldid=817244" இலிருந்து மீள்விக்கப்பட்டது