பக்கம்:பாரதியம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழா உனது வேலைகள் அனைத்திலும் பொய்க்கதைகள் மிதமிஞ்சி விட்டன.” என்கிறார். இந்த மேற்கோளிலிருந்து பாரதியின் இந்தியப் பார்வை சட்டகம், அவனுக்கு ஐரோப்பியரின் நல்ல பார்வைகளை ஏற்கவும், ஜாதி வேற்றுமை பார்க்கலாகாது என்கவும், புராணங்களை வேதங்களாக நினைத்து மடமை பேசித் திரிவதைக் கண்டிக்கவும் இடம் தருகிறது. எனவே, பாரதி முடங்கிப்போன ஒரு சட்டகத்தில் தன்னை மாட்டிக்கொள்ளவில்லை என்று கண்டு கொள்கிறோம். இன்னோரிடத்தில் மிக முக்கியமான விஷயம் ஒன்றைப் பாரதி எழுதுகிறார். அது லயன்ஸ் பற்றிய பாரதியின் சிந்தனை, இன்றைய பொருள் முதல்வாத விஞ்ஞானம் என்று கணிக்கத்தக்க இயற்கை விஞ்ஞானத்தைப் பற்றிய பாரதியின் கருத்து இது. “முன்பு நமது தேசத்திலே உபநிஷத்துக்காரர் தெய்வத்தின் விதியைக் குறித்துப் பேசும்போது சொல்லுகிறார்: தெய்வத்தின் விதியை மாற்ற முடியாது. அது எங்கும் எப்போதும் இசையும் என்று. இதை நமது முன்னோர்கண்டிருந்தனர். அந்த விதி நித்யமானது. கூடினிகம் அன்று. ஆதலால் அதை நாம் அறிந்துகொண்டு செய்கையில் பயன்படுத்த வில்லை. எத்தனை எத்தனை அவ்விதியை நாம் ஸ்வீகரிக்கிறோமா, அத்தனைக்கு அத்தனை நமது பாதையில் உள்ள தடைகள் விலகும். இந்த விதியின் ஞானமே இயற்கை நூல் (ஸயன்ஸ்) என்று சொல்லப்படும்.” இப்படி லயன்ஸைக்கூட தனது சட்டகத்தின் வழி பார்க்க, ஏற்க முடிந்தவர் பாரதி. இந்தப் பின்னணியுடன் பாரதியின் தேசிய கீதங்களை நாம் அணுக வேண்டும். வெள்ளைக்காரர்கள் பற்றிய எதிர்ப்பை இந்திய தேசிய கருத்துருவத்துடன் சேர்த்துச் சிந்திக்கலாம். பாரதியைப் புற உலகின் நிகழ்வு பற்றிய இயங்குமுறையை அறியவும் விழிப்படையவும் 51.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/53&oldid=817245" இலிருந்து மீள்விக்கப்பட்டது