பக்கம்:பாரதியம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தது, வெள்ளைக்காரர்களின் அரசியல் பற்றிய எதிர்ப்பு. தன்னுடைய ஆளுமையாய் இந்திய தேசியக் (தமிழ்த் தேசியமும், இந்துஸ்தானமும் அன்று பாரதிக்கு முரண்பட்டவை அல்ல) கருத்துருவச் சட்டகம் ஏற்படுகையில் தேசியப் பாடல்களின் உந்துதளம் இந்தச் சட்டகமாகிறது. “சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே' என்றும், “தேவி நின்னொளி பெறாத தேயமோர் தேயமாமோ?” என்றும், “கனவிலும் இன்பங்காணார் அழிவறு பெருமை நல்கும் அன்னை நின் அருள் பெறாதார்” என்றும், "சோர வாழ்க்கை, துயர், மிடி, ஆதிய காரறுக்க கதித்திடு சோதியே” என்றும், “பாரத தேவியே கனல்கால் இணைவிழி வாலவாயமாஞ் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே" என்றும், "நிருதர்கள் நடுக்குற சூல்கரத்து ஏற்றாய் நிர்மலையே பள்ளி எழுந்தருளாயே’ என்றும், “வெண்மை வளரிமயாசலன் தந்த விறன் மகளாம் எங்கள் தாய்” என்றும், ‘பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை” 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/54&oldid=817246" இலிருந்து மீள்விக்கப்பட்டது