பக்கம்:பாரதியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும், பாரதநாடு ஒரு பெண் தெய்வப் படிமத்தைச் சட்டகமாகக் கொண்டு அணுகப்படுகிறது. இந்திய தேசிய கருத்துருவத்தின் ஒரு தாரையாக இந்தப் பெண் தெய்வ வழிபாடு காணப்படுகிறது. 3 பாரதியின் மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்றான வசனகவிதை, பாரதியின் இந்தக் கருத்துருவச்சட்டகத்தைப் பிரபஞ்சச்சட்டகமாக்கி விடுகிறது. சோதி, காற்று, உயிர், தீ என்று எல்லாப் பூதங்களும் பாரதியின் சிந்தனா சட்டகத்தில் இணைக்கப்படுகிறார்கள். “நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி, மின்னல், இரத்தினம், கனல், தீக் கொழுந்து,” என்றும், “காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம், ஏற்றுகிற சக்தி, புடைக்கிற சக்தி, மோதுகிற சக்தி. சுழற்றுவது ஊதுவது சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று” என்றும், “உயிரே நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்,” என்றும் “தி தான் வீரத்தெய்வம். தீதான் ஞாயிறு. “தீயின் இயல்பே ஒளி. தீ எரிக” என்றும், பிரபஞ்சத்தின் முழுமையும் அதன் பல்வேறு உறுப்புக்களும், வடிவங்களும், அதன் உள்ளோட்டங் களும், பாரதியின் சிந்தனாச் சட்டகத்துள் கொணரப்படுகிறது. தீ, உயிர், காற்று, ஒளி என்று சக்தியின், தெய்வத்தின் குணத்துடன் இணைக்கப்படுகிறது. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு போன்றனவும் பாரதியின் இத்தகைய கருத்துருவச் சட்டகத்தின் உள் வருவனதான். 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/55&oldid=817247" இலிருந்து மீள்விக்கப்பட்டது