பக்கம்:பாரதியம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெ ாத்தத்தில் பாரதி வாழ்ந்த காலகட்டத்தின் இயங்கக் கூடிய சக்தி வாய்ந்த கருத்துருவம் ஒன்று இந்திய பிராந்திய மொழிகளின் வேற்றுமை அற்றவிதமாய் உருவானதும், அதில் பாரதி தன்னை இனம் கண்டதும் உண்மை. அதுபோல் அவரது கவிதை, இந்தக் கருத்துருவச் சட்டகத்திலிருந்து தனக்கு ரூபம் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கருத்துருவச் சட்டகம் அவரது ஒவ்வொரு கவிதைக்கும் ஒர் உள்பின்னணியைக் கொடுத்திருக்கிறது. அந்த உள் பின்னணியி லிருந்து உருவான பல்வித தலைப்புள்ள, உருவமுள்ள, உள்ளடக்க முள்ள, வடிவமுள்ள கவிதைகளும் தங்களுக்குள் ஒரு பொது குணாம்சத்தை உள்ஒழுங்காய் கொண்டிருக்கின்றன. இந்த உள் ஒழுங்கைப் பாரதியின் கவித்துவ உலக அமைப்பு என்று அழைக்க லாம். பாரதியின் கவித்துவ உலகம் பற்றிய இதுவரைய பார்வைகளின் மேலோட்டத்தன்மை இப்போது புரியும். பாரதியை இந்துமத வாதியாய்ப் பார்ப்பதோ, புரட்சிக்காரராய்ப் பார்ப்பதோ, பிராமண ஆதிக்கவாதியாய்ப் பார்ப்பதோ, இந்திய ஒருமைப்பாட்டுக் குரலாய்ப் பார்ப்பதோ, தமிழ்க் கருத்துருவவாதியாய்ப் பார்ப்பதோ பின்னங் கொண்ட பார்வைகளே, அவரது கவித்துவ உள்சட்டகத்தின் ஒருமை பற்றிய தெளிவற்ற பார்வைகளே. இந்தக் கவித்துவ உள்சட்டகம் ஒர் ஒருமையைக்கொண்டு விட்டதனால் இவர் கவிஞனாய் எஞ்சுகிறார். இவரது கருத்துலக முரண்பாடுகள் இவரது தினசரி வாழ்வு நிலையில் இவர் தன்னை வைத்தபோது வந்தவை. ரஷ்யப்புரட்சி பற்றிக் கவிதையில் புகழ்ந்து எழுதுகிறவர் கருத்துக்கள் என்று வந்தவுடன், "ருஷ்யாவிலும் கூட இப்போது ஏற்பட்டிருக்கும் சோஷலிஸ்ட் எக்காலமும் நிலைத்து நிற்கும் இயல்புடையது என்று கருத இடமில்லை” என்றும் லெனின் வழி சரியான வழியில்லை என்றும், “நாம் இந்தியாவில் இருக்கிறோ மாதலால் இந்தியாவின் ஸாத்யா ஸாத்யங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும் முதலாளிகளும், ஐரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகள் விஷயத்தில் அத்தனை 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/57&oldid=817250" இலிருந்து மீள்விக்கப்பட்டது