பக்கம்:பாரதியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவமதிப்பும், குரூரசித்தமும் கொண்டோரல்லர்”, என்றும் எழுதுகிறார். இவரது கருத்துக்களத்தின் இத்தகைய அபத்தமான கருத்துக்கள் இவரது கவிதைக்களத்தை ஏதும் செய்து விட முடியாது. கவிதையில் ஒரு கருத்தும், கட்டுரையில் இன்னொரு கருத்தும் இவர் கொண்டிருப்பதனால் தினசரி வாழ்வில் ஒரு நல்ல படைப்பாவி எப்படிச் சிந்திக்கிறானோ, வாழ்கிறானோ அப்படியே இலக்கியத் களத்திலும் இருக்கிறான் என்ற வாதம் தவறாகி விடுகிறதையும் நாம் காண முடிகிறது. இதுபோல் பாரதியிடம் உள்ள பிற முரண்பாடு களையும் அவரது கவிதை உள் சட்டகத்தின் அகண்ட தன்மையைப் பாதிக்காததாய் காண்பது எளிது. ஆங்கில மொழியில் நவ கவிஞராய் டி.எஸ் எலியட் விளங்குகிறார். அவரது நவீன வாழ்வு பற்றிய கவிதை, நவீன வாழ்வின் ஒருமையின்மை, ஒழுங்கின்மை, மனிதன் பகுதிகளில் பெரும்பலம் கொண்டு வாழும் சாய்வுத் தன்மை போன்றவற்றைப் பேசுகிறது. ஆனால் Waste Land போன்ற நவவாழ்வு பற்றிய ஆரோக்கியமற்ற தன்மையைப் பேச, தனக்குள் Myth -களின் அமைப்பை ஏற்றுக் கொள்கிறார் என்று விமர்சகர்கள் விளக்கியிருக்கிறார்கள். புராணக் கதைத் தன்மையைக் கவித்துவ உள்சட்டகமாய் டி.எஸ். எலியட்டின் கவித்துவ வெளிப்பாடு பெற்றுவிடுகையில் ஒருமையற்ற வாழ்வு பற்றிப் பேச ஒருமை உள்ள கவித்துவமுறை பயன்பட்டிருப்பதைக் காண்கிறோம். பாரதியிடமும் ஒர் உள்சட்டகம் சற்றுக் கரடு முரடானதாய் அதற்கான இறுக்கக் குணத்துடன் இருப்பது இங்குத் தெளிவாகிறது. ஆனால் டி. எஸ். எலியட்டுக்கரன அதீத நவ வாழ்வு பற்றிய பிரச்னை பாரதிக்கு இல்லை. என்றாலும், பாரதி அவரது பழைய சமூக இறுக்கங்கள், சிந்தனைகள், மரபுகள், அவற்றின் சட்டகங்கள் உடைந்த சூழலில் வாழ்ந்தார். அத்தகைய உலகை அறியும் கருத்துருவச் சட்டகம் ஒன்றைத் தேடிய நாகரிகம் ஒன்றைச் சார்ந்தவர் என்பது மறக்க முடியாதது. இங்குப் பாரதியின் தனிக்கவிதைகள் என்ற பார்வையை விட பொதுவான கவித்துவ வெளிப்படல் பற்றி மொத்தப் பார்வை மேற்கொள்வதுதான் சரியானதாக இருக்க முடியும். இதே தொனியில் படைப்பாளியின் உள் உலக ஒழுங்கு ஒன்றுதான் படைப்புக்கான தீவிர உந்துசக்தியாய் அமைகிறது என்பதும் தெளிவாகிறது. (அதாவது படைப்பு நிலையிலான அகம் ஒன்று பற்றிய பிரச்னை சார்ந்தது இது) 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/58&oldid=817251" இலிருந்து மீள்விக்கப்பட்டது