பக்கம்:பாரதியம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் நூற்றாண்டுத் தமிழ் மக்களுக்கு வெறும் இலக்கணமாக மட்டுமல்லாமல் வாழ்க்கை இலக்கியமாக இருந்தது தொல் காப்பியம். இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் - இந்திய மக்களுக்கே வாழ்க்கை இலக்கியமாக இருப்பது பாரதியம். காந்தியம் - மார்க்சியம் இரண்டின் அடிப்படை மேன்மைகளின் சங்கமமாக இருப்பது பாரதியம். பாரதியம், இலக்கை உடைய ஒர் அற்புத இயக்கம் என்பதை உணர்ந்து அதில் ஒன்றித்து ஒப்பில்லாத சமுதாயத்தை உருவாக்கத் தன்னால் இயன்ற எளிய சேவையைச் செய்யத் திட்டமிட்டுள்ளது சிவகங்கை பாரதி மண்டலம். e முதலில் 'பாரதியம் வரிசை நூல்கள்... பிறகு, பாலபாரதி, இளம்பாரதி, கலாபாரதி என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்ட முன்மாதிரியான ஒரு பாரதி கிராமம்... 'பாரதியம்’ நூல்களின் வருவாய் அனைத்தும் இலக்கிய உணர்வோடும் நம்பிக்கையோடும் தொடங்கப் பெற்றிருக்கும் சிவகங்கை பாரதி மண்டல வளர்ச்சிப் பணிகளுக்கு உதவும். 'பாரதியம் நூல்களை விலை கொடுத்து வாங்கி ஒர் உன்னதமான சமூகப்பணிக்கு உதவினோம் என்ற பெருமையை ஒவ்வொரு தமிழ் மகனும் தட்டிக்கொள்ள வேண்டும். xʻz மகாகவியின் வாக்குப்படி இந்துஸ்தானத்திற்குள்ளேயே முதன் முதலாகக் கண்ணை விழித்த போதிலும் இன்னமும் சரியாக உறக்கம் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கும். தமிழ்நாடு உடனே விழித்தெழ வேண்டும் என்ற வேட்கையுடன் இதனைப் படைக்கிறோம். மீரா சிவகங்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/6&oldid=817253" இலிருந்து மீள்விக்கப்பட்டது