பக்கம்:பாரதியம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசனகவிதையில் பாரதியின் அமுதம் பற்றிய கருத்து தெளிவு பெறுகிறது. ‘தேவர்கள் எல்லாம் ஒன்றே, காண்பனவெல்லாம் அவருடல். கருதுவன அவருயிர். அவர்களுடைய தாய் அமுதம், அமுதமே தெய்வம். அமுதமே மெய்யொளி. அஃது ஆத்மா, அதனைப் புகழ்கிறோம். ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று.” இங்குத் தேவர்களின் தாய் அமுதம். ஒளி அமுதம். ஆத்மா அமுதம். ஞாயிறு அமுதம் என்கிற அர்த்தங்கள் கிடைக்கின்றன. இப்போது, பாரதியிடம் அர்த்தங்கள், பொருள்கள் இவை தாண்டிய ஒரு சிறு உள் அமைப்பாய் இந்தச்சொல்லின் வீச்சு செயல்படுகிறதை அறிகிறோம். வானவர்கள் நம்மிடம் அமுதுண்டு குலவுகிறார் என்று வானவருடன் இணைகிறதற்கு அமுதம் பயன்படுகிறது. (சோதி வானவர் ஈண்டு நமது தோழராகி எம்மோடமுதமுண்டு குலவ...) . இருளை நீக்கி, ஒளியினைக் காட்டுவாய். இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய்” என்பதில் இறப்பற்ற நிலையை அமுதம் என்கிறார், பாரதி. இந்தவித சொல் ஏற்படுத்தும் மயக்கநிலை சொல்லின் உள்சாரத்தை நோக்கிப் போக வைக்கிறது. “உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவையுடையது. மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். உணர்வு தெய்வம். "இங்கு அமுதம் என்ற சொல், ஒரு சொல்லுக்கான, சாத்யதைகளை விட்டுவிட்டு வேறு எல்லையில் இயங்கும் சொல் என்பது புரிகிறது. சொல்லுக்கான, அதன் பிறப்புக்கு முந்திய அடிப்படையான சப்தம் என்ற குணமற்ற, அர்த்தமற்ற எல்லைக்கு நம்மை அமுதம் என்ற சொல் எடுத்துச் செல்கிறது” “உலோகங்கள், மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன, மனிதர் - இவை அமுதங்கள்.” என்று மேலும் செல்கிற வசனகவிதை நவீன உலகையும், இயற்கை சார்ந்த உலகையும், ஜீவராசிகளையும், அதில் விசேஷமான மனித இனத்தையும் கூட ஒரு சொல்லின் நாத அடிப்படையான தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. கவித்துவ உள்சட்டகம் என்ற உள் இயங்கும் ஒழுங்கின் மொழிவயப்பட்ட குணத்தைப் புரியும் தளத்தில் நாம் வைக்கப் படுகிறோம். கவித்துவ உள்சட்டகம், மொழியின் வார்த்தைகள் பிறப்பெடுக்காத ஆரம்ப ஒலியின் கூட்டமென்ற கட்டத்தைத் தனது குணமாய்க் கொண்டது. அமுதம் என்ற ஒரு சொல், அதன் சொல் தன்மையை விட்டு, மயக்கநிலையை ஏற்று அதன் அடுத்த நிலையில் வெறும் சப்தம் என்ற தளத்தில் இறங்கி, மொழி என்ற பொது 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/60&oldid=817254" இலிருந்து மீள்விக்கப்பட்டது