பக்கம்:பாரதியம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலியுடன் கலந்து, கவித்துவ உள்சட்டகமாகிறது. இலக்கியத்தின் செயல்தளம் மனதின் உள் உள்ள மொழிவயப்பட்ட தளம் என்பது இங்கு எளிதாய்ப் புரிந்துவிடுகிறது. பாரதி ஏன் சிலவேளைபைத்திய நிலை கொண்ட கவிதைகளை எழுதினார்? ஸ்தூல உலகின் நியதிகளைக் கடந்த பிம்பங்களை, படிமங்களை தனது கவிதைகளில் வைத்தான் என்பது இப்போது புரியும். அவை அவனுள் செயல்பட்ட இலக்கிய மொழிச்சட்டகத்தின் ஈர்ப்பை நோக்கிய குவி இயக்கங்கள். இவ்வியக்கத்தின் இன்னொரு பெயர் கவித்துவ உள்சட்டகம். இவ்வகையில் சுப்பிரமண்ய பாரதி ஒர் யுகத்தின் கவிதையாற்றலின் குறியீடு ஆகிறார் என்றும், சமூக கால, தள இயக்கங்களின், சுழற்சியின் மையக்கோடு அகஸ்மாத்தாக கிடைத்த பாரதி என்ற தனிநபர் வழி ஒடுகிறது என்றும், அறிகிறோம். பாரதி என்ற தனிநபர் முக்கியமில்லை என்பதும் ஒரு சமூக ஆற்றலின், மக்கள் சார்ந்த இயங்கு பிரவாஹத்தின் படைப்புச் சுழற்சிதான் மிக முக்கியமாகி யுகமாற்றத்தைக் கவிதையாக்குகிறது என்று அறிகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/61&oldid=817255" இலிருந்து மீள்விக்கப்பட்டது