பக்கம்:பாரதியம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடு எஸ்.தோதாத்ரி பாரதியின் இலக்கியங்கள் பற்றி எண்ணற்ற ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது. பல்கலைக் கழகங்களில் பாரதி பற்றிய ஆய்வுகள் தொடங்கி ஏறத்தாழ அரை நூற்றாண்டு கடந்து விட்டது. பத்திரிகைகளிலும், பட்டிமன்றங்களிலும், கருத்தரங்கங்களிலும் பாரதி பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மக்கள் கவிஞனுக்குத் தமிழக மக்கள் உரிய மரியாதையை அளித்து வருகின்றனர். ஆனால் இவ்வளவு செய்தும் பாரதி இலக்கியங்கள் இன்னும் வரலாற்று ரீதியில் ஆராயப் படவில்லை. ஒரு சில ஆய்வுகள் இந்தக் கோணத்தில் கலா நிதி. கைலாசபதி, பேரா. நா. வானமாமலை, டாக்டர் சி. கனகசபாபதி போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் இதுவரை ஆங்கிலக் கவிஞர்கள் அல்லது பிற மேல்நாட்டுக் கவிஞர்களுக்கு இருப்பது போன்று பாரதிக்குத் தரமான வாழ்க்கை வரலாறோ, இலக்கிய மதிப்பீட்டு நூல்களோ வெளிவரவில்லை. ஏன் பாரதியின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு ஒரு முழுமையான பாதிப்பாக இதுவரை வெளிவரவில்லை. சமீபத்தில் வெளிவந்த வானவில் பிரசுர வெளியீடு கூட பழைய முறையில் துதிப்பாடல்கள், தேசியப் பாடல்கள் என்ற முறையில் பொருள் 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/62&oldid=817257" இலிருந்து மீள்விக்கப்பட்டது