பக்கம்:பாரதியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றிய பாகுபாடாக இருக்கிறதேயன்றி கால வரிசைப் பதிப்பாக இல்லை. இத்தகைய பதிப்பு ஒன்று பாரதிக்கு மிகவும் அவசியம். இத்தகைய பதிப்புகள் இல்லாததன் காரணமாக பாரதியின் இலக்கிய வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி ஆகியவற்றை மதிப்பீடு செய்வது சற்று கடினமாகவே உள்ளது. இருப்பினும், இந்த இடர்ப்பாடுகளையும் மீறி அத்தகைய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாரதியின் இலக்கியக் கோட்பாடு பற்றி டாக்டர். சச்சிதானந்தம், டாக்டர் மானுவேல், டாக்டர். க. மீனாட்சிசுந்தரம், டாக்டர்.சி. கனகசபாபதி ஆகியோர் உருவவியல் (Formalistic Approach) கண்ணோட்டத் §gylb, J&G) cos(pcop (Appreciative Method) siggub sg.stuff துள்ளார்கள். பாரதி கவிதையைப் பற்றி கொண்டுள்ள கோட்பாட்டை இவர்கள் ஆங்கில இலக்கியத்தில் வேர்ட்ஸ் வொர்த்தின் கருத்துக்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார்கள். இதன்மூலம் பாரதியின் கோட்பாடு புனைவியல் (Romantic Theory) கோட்பாட்டு வகையைச் சார்ந்தது என்று நிறுவ முயற்சிக்கிறார்கள். இது உண்மையும் கூட. டாக்டர் M.மானுவேல் பின்வருமாறு எழுதுகிறார். “Bharathi’s work in changing the direction of Tamil poetry and in setting up new ideals for it reminds us of the efforts of Wordsworth and Coleridge” (P. 7/8” ESSAYS ON BHARATHI” Vol.II. Bharathi Tamil Sangam - Calcutta - 1962) பாரதியின் இலக்கியக் கோட்பாடு பற்றி மட்டுமே - அதிலும் குறிப்பாக அவரது கவிதை பற்றிய கருத்துக்கள் - மட்டுமே ஆராயப் பட்டிருக்கின்றன. பாரதியின் கலை-இலக்கியக் கோட்டுபாடுகள் ஒரு சேர மொத்தமாக இதுவரை ஆராயப்பட வில்லை. அத்துடன் மட்டுமல்லாமல் பாரதியின் கலைக் கோட்பாட்டை அவர் காலத்திய சமூகப் பின்னணியில் ஆய்வு செய்யவும் வேண்டியுள்ளது. பாரதியின் இலக்கியங்கள் பொதுவாகக் காணுமிடத்து உணர்ச்சிமய மானவை; வேகமும் ஒட்டமும் மிகுந்தவை. படிப்பவர் யாவரையும், மயக்கும் தன்மை வாய்ந்தவை. இந்தக் கூற்று அவருடைய எல்லாவகையான பாடல்களுக்கும் பொருந்தும். இதை நன்கு புரிந்துகொண்ட கவிமணி அவர்கள், “பாட்டுக் கொரு புலவன் பாரதியடா - அவன் பாட்டைப் பண்ணோடொ ருவன்பாடினானடா கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா” 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/63&oldid=817259" இலிருந்து மீள்விக்கப்பட்டது