பக்கம்:பாரதியம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று அவருக்கே உரித்தான எளிமை கலந்த நடையில் கூறுகிறார். பாரதியின் இலக்கியங்களுக்குரிய இந்தத் தன்மை, தமிழ் இலக்கியத்தில் இதற்கு முன்பு காணாத ஒன்று ஆகும். இத்தகைய வேகத்தை இளங்கோவடிகள், கம்பன் போன்ற இலக்கிய கர்த்தாக்களிடையே கூடக் காணமுடியாது. கம்பன் சான்றோர்களது கவிதையை மிக அமைதியாகச் செல்லும் கோதாவரி நதிக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறான். இது யாவரும் அறிந்த செய்தியாகும். ஆங்காங்கே காவியத்தின் ரசங்களுக்கு ஏற்ப கம்பன் சந்தங்களை மாற்றினாலும், கம்பனது கவிதை மொத்தத்தில் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ரசனையை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய கவிதையாகவே அமைந்திருக்கிறது என்பதை எளிதில் உணரமுடியும். எனவே கம்பனிடம் காணமுடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பு பாரதியிடம் காணப்படுவதற்குரிய சமூகப் பின்னணியைப் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. பாரதி ஒரு பெரிய சமூக மாறுதல் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்தவன். பாரதி ஒரு நிலப் பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவன். நிலப் பிரபுத்துவச் சமூகத்தின் ஒரு அங்கமான எட்டையபுரம் மன்னரிடம் பழகியவன். இந்த அமைப்பின் எல்லா அம்சங்களும் பாரதிக்கு நன்கு தெரிந்தவை. இந்தச் சமூக அமைப்பு வரலாற்று ரீதியாக தமிழ் நாட்டில் ஒரு ஆயிரம் ஆண்டுகளாக நிலவியிருந்தது. இதன் பொருளாதார அம்சம் ஒருபக்கத்தில் இருக்க, இதன் சிந்தனை உலகம் எவ்வாறு இருந்தது? மக்களது சிந்தனைக்குரிய அம்சங்களாக விளங்கியது மதமும், மதம் சார்ந்த இலக்கியமும் ஆகும். இவை மக்கள் மத்தியில் சமூக மதிப்புக்களை நிலைநிறுத்தும் பணியைச் செய்தன. நில உடைமைச் சமூகத்தின் அமைப்பு சிதறவிடாமல் இருப்பதற்குரிய சிந்தனைகள் இவற்றில் அதிகம் இருந்தன. நில உடைமைச்சமூகத்தின் அமைப்பானது அடிமட்டத்தில் பண்ணை யடிமைகளையும் (sert) (தமிழ் நாட்டில் பண்ணையாள்) மேல் மட்டத்தில் அரசனையும், அடியும், முடியுமாகப் பெற்றிருந்தது. அரசனுக்குப் பொறுப்பு உள்ளவர்களாக குறு நில மன்னர்களும் (பிரபுக்கள்) பண்ணையார்களும் இருந்தனர். இவர்களது நிலங்களில் உழுது பயிரிடும் பண்ணையாட்கள் உயிர் வாழ்வதற்குப் போதுமான உணவு வசதி அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இவர்களது 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/64&oldid=817261" இலிருந்து மீள்விக்கப்பட்டது