பக்கம்:பாரதியம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்பிற்கு அரசன் உத்திரவாதம் அளித்தான். இதன் காரணமாகத்தான் வள்ளுவர் அவருடைய நூலில் அரசனுக்குரிய முக்கியத்துவம்பற்றி மிக விரிவாகப் பேசுகிறார். ஒரு அரசன் எவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறுகிறார். இத்தகைய அமைப்பில் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தும் போக்கு மிகவும் அதிகமாக இருந்தது. அரசனுக்கு அல்லது அரசனுடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்கள் குறுநில மன்னர்கள்; குறுநில மன்னர்கள், பண்ணையார்கள் (வள்ளல்கள்) ஆகியோருக்குக் கட்டுப்பட்டவர்கள், உழுது உண்பவர்கள். இந்தக் கட்டுப்பாட்டு முறை (Checks and balances) யானது தமிழகத்தில் ஜாதீய அமைப்புகளால் இன்னும் அதிகமான அளவிற்கு இறுக்கமாக, பிளக்க முடியாத அமைப்பாக மாற்றப்பட்டிருந்தது, நிலப் பிரபுத்துவத்தின் பிரதான முரண்பாட்டை மூடி மறைத்துவிட்டது. பண்ணையாள் - பண்ணையார் (Serf- Land lord) முரண்பாடு நீளப் போக்கில் இருந்த (Vertical) அரசன் - பிரபு - பண்ணையாள் உறவுமுறையாலும், அதற்கு உள்ளாக இடம் பெற்றிருந்த ஜாதீயக் கட்டுபாட்டு முறையாலும் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டுவிட்டது. சமூக அமைப்பில் இந்த முரண்பாடுகள் உள்ளார்ந்து இருந்தன. இருந்தபோதிலும் ஒவ்வொரு மட்டத்திலும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிதல் என்பது ஒரு சமூக மதிப்பாகப் பின்பற்றப்பட்டது. ஒரு நிலப்பிரபுத்துவ சமூகக் குடும்பத்தில் தந்தைக்கு மகன்கள் கீழ்படிய, வேண்டும்; மனைவி கணவனுக்கு அடங்கியவளாக இருத்தல் வேண்டும். பெண்கள் திருமணத்திற்கு முந்திப் பெற்றோருக்கும், அதன்பின் கணவனுக்கும், கணவன் குடும்பத்தினருக்கும் அடங்கி நடத்தல் வேண்டும் என்ற நியதி கடைப்பிடிக்கப்பட்டது. வள்ளுவர் பெண்களுக்கு இதை ஒரு அறமாகவே போதிக்கிறார். "தற்காத்து, தற்கொண்டார்ப் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” இதே குடும்ப அமைப்புமுறை சமூக மட்டத்தில் நாடு முழுவதிலும் அரசன் - பிரபு பண்ணையாள் உறவு நிலையாக வியாபித்திருந்தது. பண்ணையாரையும், அரசனையும் எதிர்ப்பது பாவம் என்று போதிக்கப்பட்டது. மூத்தவர்கள் தவறு செய்தாலும் அதை எதிர்க்கக் கூடாது என்பது இதன் சமூக மதிப்பாக இருந்தது. ஒரு உதாரணமாக கம்பனது இலக்கியத்தை எடுத்துக் கொள்வோம். இது மொத்தத்தில் 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/65&oldid=817263" இலிருந்து மீள்விக்கப்பட்டது