பக்கம்:பாரதியம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் சமூக மதிப்புக்களைப் பிரதிபலிக்கும் இலக்கியம் அது. நிலப்பிரபுத்துவ உறவு முறை அங்கு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காண்கிறோம். தயரது: நாட்டின் அரசன், அவனுக்கு அடங்கியவர்கள் அவனுடைய மக்கள் ராமன் மூத்தவன், அவனுக்கு அடங்கியவர்கள் அவனுடைய சகோதரர்கள். இலக்குவன் இராமனுக்கு அணுக்கத் தொண்டனாதி விடுகிறான். பட்டத்திற்கு உரிமை இருந்தும் கூட பரதன் இராமனைத் தன் தலைவனாக ஏற்றுக் கொள்கிறான். இதே போன்ற அமைப்பே இராவணன் அவையில் பெரும்பாலும் காணப்படுகிறது. இத்தகைய இறுக்கமான (Closed) சமூக அமைப்பு முறையின் மனோதத்துவ விளைவு என்ன? சமூகம் ஒரே அங்கமாக இயங்கி வந்ததன் காரணமாக, சிந்தனை உலகிலும் இத்தகைய இறுக்கமான தன்மையைக் காண முடிந்தது. ஒரு உதாரணமாக ராமனைக் கைகேயி காட்டிற்குச் செல்லுமாறு பணிக்கிறாள். அது தந்தையின் ஆணை என்று கூறுகிறாள். ராமன் தந்தையின் ஆணையை மிகப் பணிந்து ஏற்றுக்கொண்டு காட்டிற்குச் செல்கிறான். சீறி எழும் இலக்குவனை யும் அடக்குகிறான். குகனைத் தன் வயப்படுத்திக் கொள்கிறான். இது போன்ற ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையைத்தான் அந்தச் சமூகம் உருவாக்கியது. எல்லோரும் அரசனைப் பற்றிச் சிந்தித்தனர். அரசனுக்காக வேலை செய்தனர். இது, மத ரீதியில் ஆண்டவனுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை கற்பிக்கப்பட்டது. ஆண்டவனுக்கு பக்தர்கள் அடிமை என்ற கருத்து உருவாகியது. இத்தகைய ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையில் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கோ, தனிநபர்களது மன எழுச்சிக்கோ அதிகம் இடம் இல்லாமல் இருந்தது. சமூகத்தை ஒரு இயந்திரம் போன்று பார்க்கும் பார்வை மேலோங்கியிருந்தது. ஒரு தனி நபருக்கும், மற்றொருவருக்கும் வேறுபாடுகளை வெளிப்படுத்தாத காலமாக இருந்தது. சமூகம் முழுவதுமே ஒரு ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பாக இருந்ததன் காரணமாக சுயதேவைக்குரிய கட்டுப்பாடு அளவிற்கு அதிகமாகவே நிலவியிருந்தது. இத்தன்மை வாய்ந்த நிலவுடைமைச் சமூகத்தின் பிந்திய கால கட்டத்தில் வெள்ளையர்கள் இங்கு வந்தனர். அவர்கள் நிலவுடைமைச் சமூக கால கட்டத்தைக் கடந்து பூர்ஷ்வா சமூக 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/66&oldid=817266" இலிருந்து மீள்விக்கப்பட்டது