பக்கம்:பாரதியம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வொரு மனிதனது மனதிற்குள்ளாகப் புகுந்து அவனது உணர்வுகளை வெளிக் கொண்டு வர முயற்சி செய்கிறார். இங்கு தனி மனிதத்துவத்தின் தோற்றத்தைக் காண முடிகிறது இந்தத் தனிமனிதத்துவத்தின் தோற்றம் பழைய நிலவுடைமைச் சமூகத்தில் காண முடியாத ஒன்று. இந்தத் தோற்றத்திற்குப் பொருந்தமான தத்துவக் கருத்துக்கள், இந்தியாவில் வெள்ளைக்காரர்களின் இலக்கியங்கள், கல்வி முறை ஆகியவற்றால் பரப்பப்பட்டன. இந்தத் தனிமனிதத்துவத்தின் தோற்றம் இந்தியாவெங்கிலும் தோன்றிய புதிய சமூகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இந்தத் தனிமனிதத்துவம் இந்தியாவில் இரண்டு வடிவங்களாக வெளிப்படுவதைக் காணமுடியும். வெள்ளையர்களது தொழில் முயற்சிக்கு எதிராக உள் நாட்டு முதலாளிகளின் தொழில் முயற்சி; இவர்களது தொழில் முயற்சிக்கு வெள்ளையர்களது அரசாங்கம் தடையாக இருந்ததால் அதை நீக்க வேண்டும் என்ற தேசிய உணர்ச்சி, இந்தத் தேசிய உணர்ச்சியானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளை மக்கள் நடுவில் வைத்தது. தனிமனிதத்துவம் மற்றொரு பக்கத்தில் தளைகளை அறுத்துத் தகர்த்தெறியும் மனப் போக்கை வளர்த்தது. முரண்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தை உருவாக்கியது. எதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற உணர்வை வளர்த்தது. உலகின் எல்லா வளங்களும் உடனேயே மனிதனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற போக்கைத் தோற்றுவித்தது. இதைப் பாரதி உணர்ச்சிகரமாகப் பின்வரும் வரிகளில் வெளிப்படுத்து கிறார். "திக்குகள் எட்டும் சிதறி - தக்கத் தீம்தரி கிட தீம்தரி கிட தீம் தரி கிட தீம் தரிகிட பக்க மலைகள் உடைந்து - வெள்ளம் பாயுது பாயுது பாயுது - தாம் தரி கிட தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம் சாயுது சாயுது சாயுது பேய் கொண்டு தக்கை யடிக்குது காற்று - தக்கத் தாம் தரி கிடதாம் தரி கிடதாம் தரிகிட - தாம் தரிகிட” “மழை" என்ற தலைப்பில் பாரதி எழுதிய பாடல் வரிகள் இவை. இந்தப் பாடல் வரிகளில் சந்த ஒசை மழையைக் குறிக்கும் வகையில் அமைந்திருந்தாலும் எழுச்சி பெற்ற தனி மனித உணர்ச்சி இங்கு 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/68&oldid=817269" இலிருந்து மீள்விக்கப்பட்டது