பக்கம்:பாரதியம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள்ளியோடுவதைக் காண முடிகிறது. இது எழுச்சி பெற்ற தனி மனிதத்துவத்தின் வெளிப்பாடு ஆகும். நிலப்பிரபுத்துவ சமூகத்தின் கட்டுக்குள்ளான மனித உணர்வுகள், இப்பொழுது வெளிப்படக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளன. நிலப்பிரபுத்துவக் கருத்துக்களை எதிர்க்க வேண்டும் என்ற தனிமனிதத்துவம் இது. இது முற்போக்கான அம்சங்களைப் பெற்றது. இந்த உலகத்தையே ஆட்சி கொள்ள வேண்டும் என்ற தனிமனிதத்துவம் இது. தேசியத்திற்கும், ஜனநாயக்திற்கும் அடிப்படை. இதிலிருந்து இந்திய சமூகம் பெற்ற உணர்ச்சி வேகத்தைத்தான் பாரதி பிரதிபலித்துக் காட்டுகிறார். அவர் “பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாவித்திடல் வேண்டும்” என்றும், “சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டாய்” என்றும் கூறும்பொழுதும் இதைப் பிரதிபலித்துக் காட்டுகிறார். இந்த உணர்ச்சி விடுதலை(Freeing ofemotion)மனிதனைச் சமமாகப் பார்க்கும் பார்வையை வளர்த்தது. மனிதனை மையமாகக்கொண்ட சிந்தனைப்போக்கை வளர்த்தது. மனிதனது உணர்வுகளை மதிக்க வேண்டும். பேரரசர்கள், தானைத்தலைவர்கள் போன்றவர்களது உணர்வுகளைவிட சாமான்ய மனிதனது உணர்வுகளை மையமாகக் கொண்ட மனித நேயம் உருவாவதற்கு இது நல்ல சூழ்நிலையை வளர்த்தது. பாரதியின் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் கலை இலக்கியம் பற்றி அவர் கொண்ட கோட்பாடுகளிலும் கூட இந்தப் பின்னணியைக் காணமுடிகிறது. பாரதியின் கலை இலக்கிய கோட்பாடு இந்தப் பின்னணியில் எழுந்த ஒன்று. அவருடைய காலகட்டத்தின் பல்வேறு சமூகப் போக்குகளை எவ்வாறு அவருடைய இலக்கியம் பிரதிபலிக்கிறதோ அதேபோன்று; அவருடைய கலை இலக்கியப்போக்கும் அமைந்துள்ளது. டாக்டர். மானுவோல் கூறுகிறார்; “It is true that Bharathi has not attempted any comprehensive treatise in prose or verse on the nature of poetry in general or on his own poetry” (Ibid - p.5) பாரதி அவருடைய கவிதை பற்றியோ, அல்லது கவிதையின் பொதுவான தன்மை பற்றியோ தனியாகப் புத்தகம் எழுதவில்லை என்பது உண்மைதான். ஆங்கிலக் கவிஞன் 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/69&oldid=817271" இலிருந்து மீள்விக்கப்பட்டது