பக்கம்:பாரதியம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரைடனைப் போன்று, அல்லது ஷெல்லியைப் போன்று அல்லது வேர்ட்ஸ் வொர்த்தைப் போன்று கவிதைக் கோட்பாடுகளை விலக்கி தனியாக நூல் எதுவும் செய்யவில்லை என்பது உண்மை. அத்தகைய நூல் எழுதவேண்டும் என்று ஒரு இலக்கிய ஆசிரியனிடம் எதிர்பார்ப்பதும் தவறு. பாரதி ஒரு உணர்ச்சிமிக்க கவிஞனாக இருந்த காரணத்தாலும், அரசியல் பாடு மிகுந்தவனாக இருந்த காரணத் தாலும், அறிவுபூர்வமான சிந்தனையுடன் கூடிய இலக்கியக் கோட்பாடு எழுதுவதற்குப் போதிய நேரம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் டாக்டர்மானுவேல் கூறுவது போன்று பாரதி கவிதைபற்றி பல இடங்களில் கூறியுள்ளார் என்பது உண்மை. அவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது கலைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்கள் தெளிவாகின்றன. சிதம்பர ரகுநாதனின் “பாரதியும் ஷெல்லியும்”, டாக்டர். சச்சிதானந்தம் அவர்களின் “பாரதியின் மீது மேலை நாடுகளின் தாக்கம்” என்ற புத்தகமும் பாரதிக்கும் மேல்நாட்டுக் கவிஞர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துக் காட்டுவதுடன் மட்டுமல்லாமல் பாரதிக்கு ஒற்றுமைகளை எடுத்துக் காட்டுவதுடன் மட்டுமல்லாமல் பாரதிக்கு எந்தெந்த அயல்நாட்டுக் கவிஞர்கள்மீது ஈடுபாடு அதிகம் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன. பாரதிக்கு ஷேக்ஸ்பியர், பைரன், கீட்ஸ், ஷெல்லி போன்ற மேல்நாட்டுக் கவிஞர்கள்மீது அதிக ஈடுபாடு உண்டு என்பது உண்மை. இதேபோன்று தமிழ் நாட்டுக் கவிஞர்களிடையே வள்ளுவர், இளங்கோ, கம்பன், ஒளவையார் ஆகிய கவிஞர்களிடையே அதிகமான ஈடுபாடு பாரதிக்கு உண்டு. இந்தக் கவிஞர்கள் பாரதியை ஈர்த்ததற்குக் காரணம் அவரவர்கள் காலத்தில் மனித நேயக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர்கள் இவர்கள். இந்த மனித நேய அம்சத்தை பாரதி இவர்கள் கவிதையில் காணும் பொழுது அதைத் தன் வயப்படுத்திக்கொள்கிறான். கவிதைக்குரிய மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் பொருள் அல்லது உள்ளடக்கம். பாரதி கவிதையின் உள்ளடக்கம் பற்றி புதிய கருத்துக்கள் கொண்டவனாக விளங்கினான் என்பதைப் பின்வரும் கூற்று தெளிவாக்குகிறது: "கானப் பறவை கலகலெனு மோசையிலும் காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும் ஆற்றுநீரோசை அருவி யொளியினிலும் 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/70&oldid=817275" இலிருந்து மீள்விக்கப்பட்டது