பக்கம்:பாரதியம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலப் பெருங்கடலெந் நேரமூமே தானிசைக்கும் ஒலத் திடையே யுதிக்கு மிசையினிலும் மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதி லூறிடுந்தேன் வாரியினும் ஏற்றநீர்ப் பாட்டி னிசையினிலும், நெல்லிடிக்குங் கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சு மொலியினிலும் சுண்ணமிடிப் பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகு.பல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டியிசைந்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன்” (குயில் பாட்டு - குயிலின் காதல் கதை) குயில் பாட்டின் இந்த வரிகளில் கவிதைக்குரிய பொருளை மிகவும் விரிவாகக் கூறுகிறார். இயற்கை சக்திகள், காதல், ஏற்ற நீர்ப் பாட்டு, நெல்லிடிக்கும் பாட்டு, பண்ணைகளில் வேலைசெய்யும் பெண்கள் பாட்டு ஆகிய பல மக்கள் பாடல்களை பாரதி உதாரணமாகக் காட்டுகிறார். கவிதைக்குரிய பொருளைக் கவிஞன் வாழ்வின் பல மட்டங்களிலிருந்தும் பெறவேண்டும் என்பதை இங்கு உணர்த்துகிறார். இந்தப் பொருள்களை உள்ளடக்கமாகக் கொண்ட பாடல்களின் ஒலியில் மனத்தைப் பறிகொடுத்தாகக் கூறுகிறார். பாரதி இதேபோன்ற ஒரு கோட்பாட்டை சங்கீதம் பற்றியும் உருவாக்கி யுள்ளார். கர்நாடக இசையில் வல்லவர் பாரதி. அவரது குடுப்பத்தார் கர்நாடக இசையை நன்கு கற்றவர்கள். பாரதியின் தாய்மாமனாரும், அத்தை புருஷரும் இசைப் பயிற்சி பெற்றவர்கள். பாரதிக்கு இசைப் பயிற்சி இளமையிலிருந்தே ஏற்பட்டிருக்கிறது, கர்நாடக இசைபற்றி பாரதி கொண்டிருக்கும் கருத்து வைதீகமான இசைப் பண்டிதர்களுக்கு இசைவான கருத்து அல்ல. இசையையும் சாதாரண மனிதன் நிலையிலிருந்துதான் பாரதி காண்கிறார். பாரதி கூறுகிறார். “இப்போது உலக முழுவதிலுமே ராஜாக்களையும் பிரபுகளையும் நம்பி வித்தை பழகும் காலம் போய்விட்டது. பொது ஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல் கலைகளுக்கெல்லாம் போஷனையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும். அவர்களுக்கு உண்மையான அபிருசி உண்டாக்கிக் கொடுப்பது வித்வான் களுடைய கடமை” (பாரதியும் பாட்டும் - பெ.துரன். பக்.23) 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/71&oldid=817277" இலிருந்து மீள்விக்கப்பட்டது