பக்கம்:பாரதியம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தக் கண்ணோட்டத்தில் பாரதி கலைகளைக் காண்கிறார். இது நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கலை இலக்கியம் அரசனையும், அரசசபையையும் சார்ந்ததாக இருந்தது. அவர்களுக்குப் பிடித்தமான அம்சங்கள், விஷயங்கள் அவற்றில் இடம்பெற்றிருந்தன. அவர்களது ரசனை கலையில் அதிகமான ஆதிக்கம் பெற்றிருந்தது. அவர்களுக்கு என்று உருவாக்கப்பட்ட கலை தவிர, பொது மக்களுக்குரிய கலையும் இருந்தது. அது நாடோடி வடிவத்தில் இருந்தது. ஆனால் அது கற்றவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் பாரதி காலத்தில் இந்த நிலைமை மாறியது. இதை நன்கு உணர்ந்த பாரதி கலையை மனிதனுக்கு உரிமையாக்குகிறார். இந்த மனிதன் எழுச்சி பெற்றவன், இவனுக்கு புதிய ருசியை உண்டாக்கவேண்டும். அவ்வாறு உண்டாக்கினால் கலை விரைவாக வளரும் என்ற கோட்பாட்டை பாரதி முன்வைக்கிறார். கர்நாடக சங்கீதம் பற்றி அவர் கூறியுள்ளவை இதற்குச் சான்று பகர்கின்றன. நமது கர்நாடக சங்கீதம் நிலப்பிரபுத்துவ ரசனை மிகுந்த கலை . இது உழைக்கும் மக்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை அல்ல. ஒய்வு மிகுந்த வர்க்கத்தினர் அரசவை ரசனைக்காக உருவாக்கிய கலை இது. இதன் கலைஞர்கள் அனைவரும் அரசனைச் சார்ந்தவர்கள், பிரபுக்களைச் சார்ந்தவர்கள், அல்லது மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற பிரிவினராக இருந்தனர். தியாகய்யர்மதத்தைச்சார்ந்தவர் (கடவுளை) புரந்தரதாஸர் மதத்தைச் சார்ந்தவர். இதன் ரசனை மக்களை விட்டு விலகிய ரசனை. இதைக் கொச்சைப்படுத்தும்பொழுது இந்த ரசனை அறவே அழிந்து விடுகிறது. இதை ரசிக்கத் தெரிந்த சிறிய மக்கள் கூட்டம் கூட இதை ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. இதை பாரதி பின்வருமாறு கூறுகிறார். "நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் வாதாபி கணபதிம் என்று ஆரம்பஞ் செய்கிறார். ராமநீ ஸ்மான மெவரு' 'மரியாத காதுரா வர மு லொஸ்கி. ஐயையோ ஐயையோ ஒரே கத்தல், ஒரே கதை 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/72&oldid=817279" இலிருந்து மீள்விக்கப்பட்டது