பக்கம்:பாரதியம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்த ஜில்லாவுக்குப்போ, எந்த கிராமத்திற்குப்போ எந்த வித்வான் வந்தாலும் இதே கதை தான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக்கணக்காகக் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். தோற் காது உள்ள தேசங்களில் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்” (பாட்டும் பாரதியும்- பெ.துரன் பக். 21/22) இசை எல்லோருக்கும் பொதுவானதாக மாற வேண்டும். அது மக்கள் ரசனையைக் கெடுத்து விடக் கூடாது; கர்நாடக இசைநிலப்பிரபுத்துவ இசையாக இருந்தாலும், அது புதிய சமூக மாறுதலுக்கு ஏற்றபடி உருவத்திலும், உள்ளடக்கத்திலும் மாற வேண்டும் என்று பாரதி வலியுறுத்துவதை இங்குக் காணமுடிகிறது. அது பொதுமக்கள் கலையாக மாற வேண்டும் என்ற ஜனநாயக மரபு இங்கு தோன்றுகிறது. இதை மேலும் பாரதி வலியுறுத்துகிறார். இசைபொது மக்களுக்கு விளங்கக் கூடிய மொழியில் இருத்தல் வேண்டும் என்பது பாரதியின் வாதம். அதை - வேற்றுமொழியில் பாடும் பொழுது மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. இதனால் ரசனை கெடுகிறது என்கிறார் பாரதியார். அவர் கூறுகிறார்: “முத்துசாமி தீகூஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் - இந்த மூன்று பெயருடைய கீர்த்தனைகளைத்தான் வழக்கத்தில் அதிகமாய்ப் பாடுகிறார்கள். இவற்றுள் தீகூஷிதரின் கீர்த்தனைகள் பச்சை ஸம்ஸ்கிருத பாஷையிலே எழுதப்பட்டவை. இவை கங்கா நதியைப்போல கம்பீர நடையும் பெருந்தன்மையும் உடையன. வேறு பல நல்ல லக்ஷணங்களும் இருந்தபோதிலும் ஸ்ம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருப்பதால் இவை நமது நாட்டுப் பொது ஜனங்கள் ரஸ்ானுபாவத்துடன் பாடுவதற்குப் பயன்படமாட்டா” (பரட்டும் பாரதியும் -பெ. தூரன் பக்.24) இந்தக் கோட்பாடு பழங்காலத்திய கருத்திலிருந்து வேறுபட்ட ஒன்று. இசைக்கலைக்கு இத்தகைய கருத்தை முன் வைக்கும் பாரதி கவிதைக்கும், உரைநடைக்கும் இதே கருத்தை முன் வைக்கிறார். கவிதை பற்றி பாரதி சிந்தித்திருப்பது பல அறிஞர்களால் ஏற்கனவே எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கவிதை பற்றி பாரதியின் கருத்துக்களை பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் மிகத் தெளிவாகக் கூறுகிறார். 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/73&oldid=817281" இலிருந்து மீள்விக்கப்பட்டது