பக்கம்:பாரதியம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திற்கும், அமைதிக்கும் ஒப்பிட்டுக் காட்டுகிறான். இதை பாரதி அவர் காலத்திற்கு ஏற்றபடி பொருள் கொள்கிறார். கம்பனது கவிதைக் கோட்பாடு சமூக மாறுதல் நிகழ்வதற்கு இடமில்லாத கோட்பாடு. இருக்கக்கூடிய சமூகம் அப்படியே, அமைதியாக இருத்தல் வேண்டும் என்ற சிந்தனையின் தாக்கம் கம்பனது கவிதைக் கோட்பாட்டில் உள்ளடங்கியுள்ளது. இதை பாரதி தனது காலத்திற்கு ஏற்பப் பொருள் கொள்கிறான். பாரதி கூறுகிறார். ‘வசனநடை கம்பர், கவிதைக்குச் சொல்லியதுபோலவே தெளிவு, ஒளி, தன்மை ஒழுக்கம் இவை நான்குமுடையதாகயிருக்க வேண்டும்.” வசனத்துக்குத் தெளிவும், குளிர்ச்சியும் அவசியம் என்பதை பாரதி கம்பரை உதாரணம் காட்டி வலியுறுத்துகிறார். அதே தன்மைகள் தமிழ் வசனத்திற்கும் வேண்டும் என்று பாரதி கூறுகிறார். இந்தத் தெளிவு சங்கீதம், நாடகம் போன்ற கலைகளிலும் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். இசைக்கலை மக்களுக்கு விளங்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மக்கள் பயன்படுத்தும் இசை வடிவங்களைப் பிரபலமாக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். பெண் பாடக்கூடிய அம்மானை, நலங்குப் பாடல்கள் போன்றவற்றை சீர்திருத்தத் வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். பெண்களுடைய பல்வேறு வகையான பாடல்களைப் பற்றிக் கூறிய பின்பு பாரதி எழுதுகிறார், “பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள், நெல் குத்துவோர், சுண்ணாம்பு இடிப்போர், குறிகாரி, தொம்பச்சி முதலிய வகுப்பினர் தந்தமக்கென்று தனியான மெட்டுக்கள் வைத்தும் கொண்டிருக் கிறார்கள். மேற்கூறப்பட்ட பாட்டுகளில் இன்பமான சந்தங்கள் பல இருக்கின்றன. இவை கால வெள்ளத்தில் மறைந்து போகுமுன்பாக சங்கீத வித்வான்கள் பொறுக்கியெடுத்து ஸ்வர நிச்சயம் செய்து வித்தை பழக்கத்திலே சேர்த்து விடல் வேண்டும்” - நாட்டார் வழக்காற்றியலின் பண்புகளை இலக்கியமாக்கவேண்டும் என்ற போக்கு பாரதியின் இலக்கியக் கோட்பாட்டின் ஒரு அம்சமாக விளங்குகிறது. இது இலக்கியக் கோட்பாட்டில் சமத்துவப் பார்வை இருப்பதன் விளைவாகும். கலை இலக்கியத்தில் இத்தகைய பார்வை பாரதியை மற்றொரு கோணத்திற்கு இட்டுச் செல்கிறது. கவிதைக்குரிய மிக முக்கியமான அம்சம் உணர்ச்சி நிலை. இந்த நிலையானது கவிஞனை ஒரு பித்தனாக்கி விடுகிறது. பாரதி 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/75&oldid=817288" இலிருந்து மீள்விக்கப்பட்டது