பக்கம்:பாரதியம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ரஸ் ஞானமில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர் ஸங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள் இக்காலத்து ஸங்கீத வித்வான்களிலே பலர் 'ஸங்கீதத்திற்கு நவரசங்களே உயிர் என்பதை அறியாதவர் (பாட்டு - 'பாரதியும் பாட்டும் - பெ.துரன் - பக்.21) இத்தகைய உணர்ச்சியை கலைக்கு உயிராகக் கருதும் பாரதி கலையை ரசிப்பவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார். பாரதி காலத்தில் புதிய ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருந்தனர். இந்தப் புதிய ரசிகர்கள் மகாராஜாக்களோ பிரபுக்களோ அல்லர். அவர்கள் பொதுமக்கள் ஆனால் இவர்கள் நிலைமை மிகவும் மோசமானது இவர்களுக்கு கலைஞானம் கிடையாது. இவர்களுக்குச் சுவை ஊட்டுவது கலைஞர்களது கடமையாகும். இவர்கள் புதிய சமூகத்தின் அங்கமாக விளங்குபவர்கள். இவர்களுக்கு வேகம் வரும்படியாகக் கலையும், இலக்கியமும் அமைதல் வேண்டும். இவர்களுடைய சுவைக்கு ஏற்றபடி புதிய சுவையுள்ள கவிதைகள் இயற்றல் வேண்டும் “சொற் புதிது, சுவை புதிது சோதிமிக்க நவகவிதை” என்று பாரதி கூறும் பொழுது கவிஞனது உணர்ச்சிகரமான நிலைமை சுவைஞனுக்கும் வேண்டும் என்ற பொருள் தொனிப்பதைக் காணமுடிகிறது: 'பாட்டு’ பற்றி அவர் கூறும் பொழுது இதை இன்னும் விரிவாகப் பேசுகிறார். "ஊர்தான் ராஜா இந்த ராஜாவுக்கு ஆரம்பத்திலே கொஞ்சம் ஞானம் அளித்துப் பழக்கங் கொடுத்தால், வித்தைகளுக்கு எந்த விதமான குறைவுகளும் ஏற்படாது. (பாட்டும் பாரதியும்பெ.துரன் - பக். 23) பாரதியின் காலத்திற்கு ஏற்றபடியுள்ள சுவை தேவை என்பதை விவரிக்கிறார். இதுவரை நம் நாட்டின் பிற்போக்குத்தன்மை காரணமாக அவல ரசமு (சுவை)ம், காமச்சுவை (சிருங்கார ரசம்)யும் மிக அதிகமாகக் கலை இலக்கியத்தில் கையாளப்பட்டன. பாரதி இவை கூடாது என்கிறார். வீரமும், விழிப்புணர்ச்சியும் உள்ள ரசங்கள்தான் தேவை என்கிறார். அவர்கூறுகிறார்: “கருணா ரஸ்மூலர் (அதாவது சோகரஸ்மும்) சிருங்கார ரஸ்மும்தான் நமது தேசத்தில் நடைபெறுகின்றன. மற்ற வீரம் கோபம் (ரெளத்திரம்) வியப்பு, வெறுப்பு, அச்சம், நகைப்பு, சாந்தம் என்ற ரஸங்களின் விலாசம் பாட்டிலே காணப்படவில்லை.” 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/77&oldid=817292" இலிருந்து மீள்விக்கப்பட்டது