பக்கம்:பாரதியம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்க்கோட்பாடு நிலப்பிரபுத்துவ சமூகச் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. வடமொழிக்காவியங்களை விளக்குவதற்கு எழுந்த கொள்கை இது. தமிழ்நாட்டில் இது பிற்காலத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்தக் கோட்பாட்டின்படி நவரஸங்களும் ஒரு இலக்கியத்தில் இருத்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. இந்தக் கோட்பாட்டில் படைப்பாளியின் செயலும், சுவைஞனது நிலையும் ஒருமித்து இருக்கவேண்டும் என்பதும் முக்கிய அம்சமாக இருந்தது. இது படைப்பு: சுவைத்தல் ஆகிய இரு அம்சங்களையும் இணைக்கும் கோட்பாடு. இதன் பண்பு இந்த முறையில் அமைந்திருந்தாலும், இது ஒரு சமூக நிலையில் நிலபிரபுத்துவ சமூகத்தின் சுயக்கட்டுபாட்டு முறைக்குச் சமமான ஒன்றாகும். சமூக மாறுதல் அதிகம் இடம்பெறாமல் இருப்பதற்கு ஏற்ப கலையில் நவரலங்களும் இடம்பெறுதல் வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்த கோட்பாடு இது இருக்கக்கூடிய சமூகம் மாறாத் தன்மையுடையது; இது நிரந்தரமானது. இந்தத் தன்மையின் பிரதிபலிப்புதான் ரஸ்க்கோட்பாடு. ரஸங்கள் சமநிலையில் கலந்து இருப்பதுதான் சிறந்த காவியம். இது உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு அதிக இடம் தராது. அதற்குப் பதிலாக உணர்ச்சியின் வடிகால்களாக அமைந்துவிடும். ஆகையினால்தான் பாரதி கருணாரலமும் (சோகம்) சிருங்கார ரஸ்மும் தேவையில்லை என்று கூறுகிறார். அவருடைய ஆத்தி சூடியில் ரெளத்திரம் பழகு” என்று கூறுகிறார். ஒரு வித்வான் பாடும்பொழுது மக்களிடையே வீரம் வரும்படி பாடவேண்டும் என்று குறிப்பிடுகிறார். பாரதி இந்தக் கோட்பாட்டின் சில அம்சங்களை மாற்றிப் பயன்படுத்துகிறார். கவிதை, சிறுகதை, கலைகள் ஆகியவற்றில் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டும் இருந்தால் போதாது. அவற்றுற்கு ஒரு சமூகக் கடமை உண்டு என்ற கோட்பாட்டைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவரே பாரதிதான். நாம் முன்னர் கண்ட விடுதலை பெற்ற தனி நபருக்கு ஒரு சமூகக் கடமை இருகிறது. அது வெறும் சுவையான கலைகளைப்படைத்தல் மட்டும் இல்லை. இந்தச்சமூகம் முழுவதையுமே பரிபாலித்தல் ஆகும். இது கவிஞனது தொழில். இதை அவன் லட்சியமாகக் கொள்ளல்வேண்டும். ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்” என்பது கூறும் பொழுது கலைஞன் நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். அத்துடன் 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/78&oldid=817293" இலிருந்து மீள்விக்கப்பட்டது