பக்கம்:பாரதியம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் சர்வதேசச் சிந்தனைகள் ஆ.செகந்நாதன் அறிவியல் வளர்ச்சியின் கண்டுபிடிப்புக்களால் புறத்தே தன்னை அலங்கரித்துக்கொண்டுள்ள உலகத்தின் ஆன்மாவை யுத்த நெருக்கடிகள் அச்சுறுத்தும் காலம் இது. தனி மனிதன் ஒதுங்கியிருக்க நினைத்தாலும் முடியாத அளவுக்கு உலகத்தின் பிரச்சினைகள் அவனை வந்து சேர்கின்றன. உலகப் போரில் நேரடியாகப் பங்குபெறாத இந்திய மண்ணின் குடிமகன் கூட, காலநிலையின் கட்டாயத்தால் பாகிஸ்தானை அமெரிக்கா ராணுவ மயமாக்குவது பற்றியும், டீகோகார்சியாவில் அமெரிக்கா அணு ஆயுதத்தளம் அமைத்திருப்பது பற்றியும், கட்டிடங்களை விட்டுவிட்டு மனிதர்களை மட்டும் மாய்க்கப் பயன்படும் நியூட்ரான்குண்டுகளைப் பற்றியும் சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நமக்கென்ன வந்தது என்று ஒதுங்கியிருக்க முடியாத நிலையில் சர்வதேசப் பிரச்சினைகள் நமக்கு மிக நெருக்கமாகி விடுகின்றன. உலகத்தின் எந்த மாற்றமும் நம்மைப் பாதிக்கும் விதத்தில் உலகம் சுருங்கியுள்ளது. மனிதாபிமானத்துடன் கூடிய உலக நோக்கை இந்த மண்ணுக்கு பாரதியார் போதிக்கிறார். பாரதியாரின் சர்வதேசச் சிந்தனைகள் 1921-ஆம் ஆண்டுக்கு முன்னிருந்த உலகின் சிக்கல்களைச் சுற்றி எழுந்தவை. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கருவின் அடிப்படையில் அவரது சர்வதேச அணுகுமுறைகள் அமையக் 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/80&oldid=817298" இலிருந்து மீள்விக்கப்பட்டது