பக்கம்:பாரதியம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காண்கிறோம். மனிதகுல ஏற்றத்தாழ்வுகள், சச்சரவுகள் ஆகிய வற்றையும் அவர் கண்டிருக்கிறார். தாழ்வுற்று, வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்ட பாரத தேசத்தைப்போல் பாதிக்கப்பட்ட உலகின் எந்த நாட்டையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. மாஜினியின் சபதம் இத்தாலியையும், பெல்ஜியத்திற்கு வாழ்த்து அந்த நாட்டையும், புதிய ருஷியா சோவியத் புரட்சியையும் சிறப்புறக் காட்டுகின்றன. தேசிய உணர்வும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் கொண்ட பாரதியார் தன் கண்களுக்கு முன்னர்போராடிக்கொண்டிருந்தவர்கட்கு அனுதாபம் தெரிவிக்கிறார். மாஜினியின் பிரதிக்கினையில் இத்தாலி நாட்டின் அன்றைய நிலைகளைப் பாரதியார் தெளிவுற விளக்குகிறார். ‘துயசீருடைத்தாம் சுதந்திரத்துவசம் துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்” என்பது மாஜினியின் குரல். சிசிலி, ரோம், வெனிஸ், நேபிள்ஸ் என்று துண்டு துண்டுகளாகப் பிரிந்து ஒற்றுமையிழந்து, உரிமை குலைந்து போய்க் கிடந்தது இத்தாலி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் ஐரோப்பா முழுவதும் தேசிய உணர்வு பெருக வேண்டிய அரசியல் அவசியம் இருந்தது. ஒற்றுமைப்பட்டால்தான் இத்தாலி உரிமைகளைப் பெறமுடியும் என்ற விழிப்புணர்ச்சியை நெப்போலியனின் படையெடுப்பு ஊட்டியது. போர்க்குணமற்ற பழமைவாதிகட்கும் நிலத்தொழிலாளர்கட்கும் உரிமை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கிய தலைவன் மாஜினி. வாலிபர்சபை ஒன்றை உருவாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஆஸ்திரிய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான குடியரசு இயக்கத்தினையும் வளர்க்க உறுதி பூண்டான் அவன். அடிமைத்தளைகளிலிருந்து இத்தாலிய நாட்டை மீட்பதற்கு அவன் கூறும் சபதத்தில் பாரதியின் சுயவேட்கையும் வருகிறது. "மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீதாணை பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும் புன்சிறைக் களத்திடையழிந்தும்” 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/81&oldid=817300" இலிருந்து மீள்விக்கப்பட்டது