பக்கம்:பாரதியம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“வேற்றுநாடுகளில் அவர்துரத் துண்டும் மெய்குலைந் திறந்துமே படுதல் ஆற்றகி லாராய் எம்மருந்ாட்டின் அன்னைமார் அழுங்கணி ராணை” என்று மாஜினி குறிப்பிடும் துயரங்கள் இந்தியாவுக்கும் நன்கு பொருந்துகின்றன. ஏகாதிபத்தியத்தின் கொடுமையில் சிக்கிய தேசங் களின் நிலைமை ஒன்று போலவே இருப்பதை அவர் உணர்கிறார். சுதந்திரமும், உயர்வும் பெற இணக்கம் ஒன்றுதான் மார்க்க மென்று பாரதி அறிவிக்கிறார். மாஜினியின் குரல் இத்தாலிக்காக ஒலித்தாலும் சர்வதேசப் பயன்பாடு வாய்ந்த குரல் இது. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து’ என்ற கவிதை பாரதியின் உலக நோக்குக்கு இன்னோர் உதாரணமாகும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் பிடியில் சிக்கி அவதிப்பட்ட நாடு பெல்ஜியம். ஏகாதிபத்தியக் கொடுமையை எதிர்த்துத் தொடர்ச்சியாக அது நடத்திய போர்களை எண்ணிய பாரதிக்கு வியப்பு வருகிறது. பல்லாயிரம்பேர் தூக்குக்கும், நாடுகடத்தலுக்கும் பலியானபோது கூட அஞ்சாமல் போராடிய தீரத்தை வாழ்த்துகிறார். அச்சத்தாலும், அறியாமையாலும் வீழாமல் அறத்தினாலும், வண்மையாலும், மானத்தாலும், வீரத்தாலும், துணிவாலும் வீழ்ந்துவிட்டதாகக் காட்டுகிறார். வீழ்ச்சியே ஆயினும் வெட்கப்படத் தேவையற்ற வீழ்ச்சி என்று வருணிக்கிறார். மென்மைவாய்ந்த பெண் மனவலிமையோடு முறத்தால் புலியைத் தாக்கியதைப்போல் பெல்ஜியம் என்ற சிறிய நாடு ஸ்பானியப் பேரரசை எதிர்த்ததைப் பாராட்டுகிறார். "வீரத்தால் வீழ்ந்து விட்டாய் மேல்வரை உருளும் காலை ஒரத்தே ஒதுங்கித் தன்னை ஒளித்திட மனமொவ் வாமல் பாரத்தை எளிதாக் கொண்டாய் பாம்பினைப் புழுவே என்றாய் நேரத்தே பகைவன் தன்னை நில்லென முனைந்து நின்றாய்” 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/82&oldid=817302" இலிருந்து மீள்விக்கப்பட்டது