பக்கம்:பாரதியம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சுதல் கூட ஒருவகை அறுவுதான் என்று சமாதானம் கற்பித்துக் கொள்ளாமல் வீரத்தோடு போரிட்டதை வரவேற்கிறார். “பிணிவளர் செருக்கி னோடு பெரும்பகை எதிர்த்த போது பணிவது கருத மாட்டாய் பதுங்குதல் பயனென் றெண்ணாய்” என்ற வரிகள், பெல்ஜியம் ஏகாதிபத்திய எதிர்ப்பில் இழப்புகளுக்காக வருந்தாமல் ஈடுபட்டத் தீரத்தைத் தெளிவாகச் சுட்டுகின்றன. டச்சு மாகாணங்களில் ஒரு பகுதியாக விளங்கிய பெல்ஜியம் பரப்பால் சிறுத்திருந்தாலும் வீரத்தால் குன்றவில்லை. போர் நெருக்கடியால் பஞ்சமும் பசியும் அந்நாட்டைச் சூழ்ந்தபோது கூட, அந்நாட்டவரின் உறுதி குறையவில்லை. உணவுக்காகத் தெரு நாய்களுடன் போராடும் அவல நிலையில் கூட ஏகாதிபத்திய எதிர்ப்பை அவர்கள் ஒத்திப் போடவில்லை. தங்கள் உடலின் ஒரு பகுதியையே உணவாக்கிக் கொண்டாவது, எதிரிகளை வீழ்த்தவேண்டும் என்று எழுந்தனர். இத்தகைய பிடிவாதமான இலட்சியவெறி பாரதியாருக்குச் சிலிர்ப்பூட்டுகிறது. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் ஸ்பெயினையும், ஆஸ்திரியாவையும், பிரான்ஸையும் எதிர்த்துப் போராடிப் போராடிப் பலமுறை பெல்ஜியம் வீழ்ச்சியடைந்தாலும் அவ்வீழ்ச்சிகள் அறத்தினாலும், மானத்தாலும், வீரத்தாலும், துணிவாலும் ஏற்பட்டவை என்பதால் அவற்றைப் போற்றி வாழ்த்துகிறார் பாரதியார். இத்தகைய விடாப்பிடியான போர்க்குணம் பாரதத்தில் இல்லையே என்று வருந்துகிறார். அச்சமும், பேடிமையும், அடிமைச்சிறுமதியும் உச்சத்தில் கொண்டதால் இந்திய மக்கள் அடிமைகளாகவே உழல்வதையும் எண்ணினார். துணிவு கொண்டவர்களே நல்லவற்றைச் சாதிக்கமுடியும் என்று பெல்ஜியம் அவருக்கு அறிவுறுத்துகிறது. அடுக்கடுக்கான ஆதிக்க வெறிகளைச் சந்தித்த பெல்ஜியம் சுதந்திரத் தாகத்தை இழக்கவே இல்லை. ஸ்பானியர்களும், ஆஸ்திரியர்களும், பிரெஞ்சுக்காரர்களும் எப்படியெல்லாம் பெல்ஜியத்தைக் குலைத் திருக்கிறார்கள் என்பதை வரலாறு விவரிக்கும். நெப்போலிய னுடைய ஆதிக்கம் நிலவியபோது பெல்ஜியத்தின் உரிமை வேட்கை 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/83&oldid=817304" இலிருந்து மீள்விக்கப்பட்டது