பக்கம்:பாரதியம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகமானது. ஹாலந்தும் பெல்ஜியமும் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் இணைக்கப்பட்டன. 1815-இல் ஏற்பட்ட இவ்விணைப்பைப் பெல்ஜியம் கடுமையாக எதிர்த்தது. 1930-ஆம் ஆண்டு பெல்ஜியர்கள்வீரம் மிகுந்த புரட்சி செய்து, டச்சு ஆதிக்கத்தை உதறியெறிந்து தங்களுடைய சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர். தன்னுரிமை பெற்ற ஒரு தற்காலிக அரசையும் உருவாக்கிக் கொண்டனர். ஹாலாந்து மன்னனான முதலாம் வில்லியம் விடுத்து வேண்டுகோளுக்காக ரஷ்யா, பிரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பெல்ஜியப் பிரச்சினையில் தலையிட்டனர். 1831ஆம் ஆண்டில் பெல்ஜியத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்து அவர்கள் ஏற்றனர். இவ்வாறு ஒரு புரட்சிக்குப் பின்னர் பெற்ற சுதந்திரம் மறுபடியும் சோதனைக் குள்ளானது. ஹாலந்தின் படையெடுப்பால் இது நிகழ்ந்தது. இந்த முறையும் பெல்ஜியத்திற்கு வெற்றி கிட்டியது. உலக நாடுகள் அதனை ஒரு சுதந்திர நாடாகவும் நடுநிலை நாடாகவும் அங்கீகரித்தன. அச்சமற்ற, தொடர்ந்த, போராட்டங்களால் பெல்ஜியம் பெற்ற இந்த நன்னிலையைப் பாரதியார் வாழ்த்துகிறார். “அளக்கருந் தீதுற் றாலும் அச்சமே உளத்துக் கொள்ளார் துளக்கற ஓங்கி நிற்பார் துயருண்டோ துணிவுள்ளோர்க்கே” என்கிறார் அவர், தன்னுடைய கவிதைகளிலும், உரைநடையிலும் பாரதியார் அதிகமாகச் சிந்தித்திருக்கும் நாடு ரஷ்யா. சோவியத் புரட்சியை யுகப் புரட்சி என்ற பெயரில் அறிமுகம் செய்து முதன் முதலில் இங்கு கவிதை பாடியவர் பாரதியார், விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த எல்லா நாடுகளுக்குமே சோவியத் புரட்சி நம்பிக்கை ஒளியானது. பாரதியார் அதை நன்கு கணிந்து உலகுக்கு அறிமுகப் படுத்தினார். புரட்சி என்றவுடன் சிலிர்ப்படைந்து விட்டு நில்லாது, அந்நாட்டின் பழைய வரலாறு, புதிய போக்கு ஆகியவற்றைத் துல்லியமாக ஆராயவும் அவர் முனைகிறார். இத்தாலியையும், பெல்ஜியத்தைப் பற்றியும் எழுதிய போது அவற்றின் அரசியல் நிலைமைகளைப் பற்றியே பாரதியார் சிந்தித்தார்; 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/84&oldid=817306" இலிருந்து மீள்விக்கப்பட்டது