பக்கம்:பாரதியம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசிய உணர்வின் எழுச்சி என்ற சிறப்புக் களையே பாராட்டினார். ஆனால் சோவியத் அக்டோபர் புரட்சியைப் பற்றி எழுதும்போது அதன் பொருளாதார அரசியல் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்து கொள்ளாவிட்டாலும், ஓரளவு சிந்திக்கவே செய்கிறார் பாரதியார். ஜார்மன்னர்களின் கொடுங்கோன்மை வீழ்ந்தது என்று மகிழும்போது இந்திய நிலைமையை உணர்ந்து ஒப்பிட்டுப்பார்க்கும் நிலையில்தான் அவர் இருக்கிறார். “இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜாரெனும் ரிசைந்த பாவி”...... “இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் இவ்வாறங்கே செம்மையெலாம் ப்ாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில்...” "சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார் புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே” என்றெல்லாம் மகிழ்கிறார். புரட்சிக்கு முன்பிருந்த ரஷ்யாவின் நிலையை எண்ணும்போது அடிமை இந்தியாவின் அவலங்களும் அவருக்கு முன்னர் நிழலாடுகின்றன. பெல்ஜியத்தின் விடா முயற்சிகளைப் போலவே ரஷ்யப் புரட்சியும் இந்திய விடுதலை இயக்கத்துக்கு நம்பிக்கை ஒளி காட்டும் என்று அவர் கருதுகிறார். குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி ரஷ்யாவில் எழுந்ததைப் போல இந்தியாவிலும் எழவேண்டுமென்று விரும்புகிறார். 'அடிமைக்குத்தளையில்லை யாருமிப்போது அடிமையில்லை அறிக என்பது பாரதியின் வேட்கை. அரசியல் ரீதியான இந்த விடுதலையை மட்டுமே பாரதி ரஷ்யாவில் கண்டார் என்பது சரியல்ல. யுகப்புரட்சி, குடிமை நீதி ஆகிய 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/85&oldid=817308" இலிருந்து மீள்விக்கப்பட்டது