பக்கம்:பாரதியம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றத்தாழ்வுகளுக்கு இறைவனே காரணம் என்ற கோட்பாட்டைக் கண்டிக்கிறார். ஒருசிலரின் சுரண்டலே இந்நிலைக்குக் காரணம் என்பதை உணர்த்துகிறார். "...உலகத்துச் செல்வர் சகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டெடுத்துக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால், அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழையாயிருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு , நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா? என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்யவேண்டும்”... வேறு எந்தக் கவிஞனும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு இப்பிரச்சினையை ஆராய்கிறார். உலகின் மிகப்பெரிய இந்தச் சிக்கலை எப்படியேனும் தீர்த்தாகவேண்டும் என்று கருதுகிறார். பொருளாளிகள் அன்பையும், சமத்துவ நினைப்பையும் கைக் கொண்டால், உலகத்தில் அழிவுகள் நேராமல் காக்கலாம் என்று எச்சரிக்கிறார். உலகுக்கு அவமானம் தரக்கூடிய இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வைத் தகர்த்து சோஷலிசத்தை உருவாக்கியதற்காக ரஷ்யாவை அவர் பாராட்டுகிறார். செல்வத்தால் பெருகிய ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டுமென்ற கொள்கை ஐரோப்பாவில் மும்முரமாகப் பரவுவதாக உணர்கிறார். துவக்கத்தில் பலரால் வெறுக்கப்பட்ட இக்கோட் பாட்டின் உயர்வை உணர்த்தும் விதத்தில் ரஷ்யா செயல்படுவதைப் பாரதியார் நன்கு கவனித்தார். “ஏற்கெனவே ருஷ்யாவில் பூரீமான் லெனின், பூரீமான்மின்த்ரோத்ஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின்கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடைமையாகிவிட்டது. இக்கொள்கை ஜெர்மனியிலும், ஆஸ்திரேலியாவிலும், துருக்கியிலும் அளவற்ற வன்மை கொண்டு வருகிறது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரம்மாண்டமான பகுதியாக நிற்கும் லைபீரியா தேசம் ருஷியாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததாதலால், அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/87&oldid=817312" இலிருந்து மீள்விக்கப்பட்டது