பக்கம்:பாரதியம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்துவிட்டது. ஐரோப்பாவிலுள்ள பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைத் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள் புரிந்து வருகிறார்கள்”, என்கிறா: பாரதியார். பொதுவுடைமை அமைப்பை வரவேற்கும் போக்கில், உலக நாடுகளின் அன்றைய நிலைமைகளைத் தீட்டுகிறார். வல்லரசுகள் இக்கோட்பாட்டைக் கண்டு முகஞ்சுளித்ததையும், வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாகப் பிரச்சாரம் செய்ததையும் பாரதியார் அம்பலப்படுத்துகிறார். பாட்டாளிகள் அரசு அமைக்கப் பட்டிருந்த ரஷ்யாவில் பெண்களும் பொது உடைமையாக்கபட்டு விட்டார்கள் என்று போக்கிரித்தனமாகப் பொய்ப்பிரச்சாரம் செய்தவர்களை ஏசுகிறார் அவர். ‘கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கு. ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்யத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக்கொண்டிருக்க முடியும்?” என்று வினவியதோடு, மாஞ்செஸ்டர் கார்டியன் பத்திரிகையில் வெளியான நவீன ருஷ்யாவின் விவாக விதிகளையும் விளக்கினார். சோவியத் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார சமத்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றை எண்ணிப் பாராட்டி, நாமும் அந்நிலை பெறவேண்டுமென்ற ஏக்கத்தை வெளியிடுகிறார் பாரதியார். ரஷ்யாவின் சமுதாய, அரசியல், பொருளாதார மாற்றங்களை ஏற்றுக் கொண்ட பாரதியார், அங்கு நடந்த அக்டோபர் புரட்சியின்போது சிந்தப்பட்ட ரத்தத்துளிகளுக்காக வருந்துகிறார். பொது உடைமை என்ற நெறியைச் சிலாகித்தபோதும், அந்நெறியைப் பரப்ப ஆயுத மேந்தக்கூடாது என்பது பாரதியின் கருத்து. ரஷ்யாவிலிருந்த கொடுமைகளால் அந்த ஆயுதப்போர் தவிர்க்கமுடியாது போயிற்றென்றும், வேறு நாடுகளில் இந்த முறை நியாயமாகா தென்றும், அவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு லெனின் வழி சரியான வழி இல்லை என்று அவர் குறிப்பிட்டு விட்டதாலேயே அவரை பொது உடைமை எதிர்ப்பாளராகக் கொள்ளக்கூடாது. மார்க்சீய ஞானத்தின் அறிமுக மில்லாத நிலையில் ஏற்பட்ட முடிவு இது. எனினும் சுரண்டலைச் சகித்துக்கொண்டு வாழ்வதை அவர் ஒரு போதும் ஏற்றதில்லை. 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/88&oldid=817314" இலிருந்து மீள்விக்கப்பட்டது