பக்கம்:பாரதியம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆனால், கோடிக்கணக்கான ஜனங்கள் வயிறு நிறைய உணவு இடைக்குமென்ற நிச்சயமில்லாமலும், லக்ஷக்கணக்கான ஜனங்கள் ஒருவேளைக் கஞ்சி கிடைக்காமலே சுத்தப் பட்டினியால் கோர மரணமெய்தும்படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலைமையை நாம் ஒரு rணம் கூடச் சகித்திருப்பது ஞாயமில்லை என்பது சொல்லாமலே போதரும்”, என்கிறார் பாரதியார். இந்தியாவில் நிலவிய ஜாதிக்கொடுமைகள், பெண்ணடிமைத்தனம் முதலான சிறுமைகளைப் பற்றிச் சிந்திக்கும்போதுகூட பாரதியார் சர்வ தேச அளவில் தன் பார்வையைச் செலுத்துகிறார். வேல்ஸ் இளவரசனுக்களித்த வரவேற்புக் கவிதையில் கூட அந்நியர் எப்படி மூடத்தனங்களை அகற்றி வருகின்றனர் என்று சிந்திக்கிறார். சியூசின் என்ற சீனப்பெண் ஆற்றிய பெண்ணுரிமைப் பேச்சை மொழி பெயர்க்கிறார். தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை என்ற கட்டுரையில் அங்கு நிலவிய பெண்ணுரிமை இயக்கத்தை விவரிக்கிறார். தமிழ்நாட்டுப் பத்திரிகைகளின் சீர்கேடுகளைப்பற்றி எண்ணு மிடங்களில் கூட மற்ற நாடுகளில் பத்திரிகைகள் எப்படியிருக்கின்றன என்று பாரதியார் சிந்திக்கிறார். தமிழ்க் கட்டுரைகளுக்குக் கூட ஆங்கிலத்தில் தலைப்பினை எழுதிய சில பத்திரிகைகள் தமிழ்நாட்டில் இருந்ததை அவர் எள்ளுகிறார். “இங்கிலாந்தில் வர்த்தமான பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும், பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்த்திர நிபுணர், ஜனத்திருத்தத் தலைவர் முதலியவர்களின் உபந்யாசங்களையும், பல பிரெஞ்சு ராஜாங்க சம்பந்தமான விவகாரங்களையும், பிரெஞ்சுப் பத்திரிகைகளி லிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்துப் பத்திரிகைகள் ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்து எழுதுகின்றன. ஆனால் அந்த மொழி பெயர்ப்புக்களில் ஸ்வபாஷை யின் வசனநடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால் தமிழ்நாட்டிலோ முழுதும் தமிழ் நடையைவிட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது”, என்று பாரதியார் விமர்சிக்கிறார். பிறநாட்டு நல்லறிஞர்சாத்திரங்கள் தமிழ் 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/89&oldid=817316" இலிருந்து மீள்விக்கப்பட்டது