பக்கம்:பாரதியம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாகவி பாரதியார் மேற்கொண்ட நூல் வெளியீட்டு முயற்சிகளும் திட்டங்களும் சீனி - விசுவநாதன் இன்று நாம் பெரிய பெரிய தொகுதிகளாகக் காணும் மகாகவி பாரதியாரின் படைப்பிலக்கியங்கள் யாவும் ஆரம்ப காலங்களில் சிறுசிறு வெளியீடுகளாகவேதான் பிரசுரமாயின. மகாகவி பாரதியார், தாம் உயிரோடிருந்த காலத்திலேயே ஒருசில நூல்களைப் பிரசுரித்தார். தம்மால் மிக்க அன்புடன் 'தம்பி’ என்று உரிமையோடு அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பரைக் கொண்டும் ஒரு சில கவிதை நூல்களை வெளியிடச்செய்தார்; ஒருசில மொழிபெயர்ப்பு நூல்களையும், கதைத்தொகுதி நூல் ஒன்றையும் 'சுதேசமித்திரன்’ புத்தக சாலைப் பிரிவும் வெளியிட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாது, 'மாதா மணிவாசகம்’ என்றொரு பாடல் நூல் தொகுதி தென்னாப்பிரிக்காவிலும் பிரசுரமானது. மகாகவி பாரதியார் தாம் உயிரோடு இருந்த காலத்தில், தம் நூல்கள் வெளிப்படுவதில் தீவிர கவனம் செலுத்தினார். அதன் பொருட்டுப் பல வித முயற்சிகளை மேற்கொண்டார்; திட்டங்களை வகுத்தார். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/9&oldid=817318" இலிருந்து மீள்விக்கப்பட்டது