பக்கம்:பாரதியம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று கூறிய பாரதியா; அம்மொழிபெயர்ப்பை எப்படிச் செய்வது என்பதையும் உலக அளவில் ஆய்ந்து கூறுகிறார். உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப்புலவர் கவிதைக்குக் கூறிய விளக்கத்தையும் பாரதியார் நமக்கு விவரிக்கிறார். மேற்கு நாடுகளின் கவிதையில் வீண்சொற்கள் மிகுதியாயிருப்பதாகவும், ஒசைநயம் கருதி வெற்றுச் சுமைகளைக் கவிதை தாங்கியிருப்பதாகவும் அந்த ஜப்பானியர்கூறுகிறார். ஜப்பானில் அந்தக் குறை இல்லையென்றும், கூடை கூடையாக எழுதவேண்டும் என்ற வெறியில்லாமல் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் எண்ணமே இருப்பதாகவும் அவர் கூறுவதைப் பாரதியும் ஏற்கிறார். சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் தமிழிலும் உண்டென்பதையும், கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத்தறிந்த குறள் அதற்கு உதாரணம் என்றும் விளக்குகிறார். "ஆனாலும், ஒரேடியாகக் கவிதை சுருங்கியே போய்விட்டால் நல்ல தன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் ஹொகூஷி' பாட்டன்று” என்ற விமர்சனமுத்திரையைப் பாரதி போடுகிறார். பிஜித்தீவுக் கரும்புத் தோட்டத்தில் துன்பப்படும் பெண்களின் நிலையை எண்ணித் துயரும்போதும் பாரதியின் மனம் புலப்படுகிறது. நாடு, மொழி, இனம் - என்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்து மனித குலம் முழுவதையும் பரந்த கண்ணோட்டத்தில் பாரதியார் தரிசிக்கிறார். பாதிக்கப்படுவோர் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கு பச்சாதாபம் கொள்கிறார். போராடுவோர் எங்கிருப்பினும் அவர்களுக்காகப் பரணி பாடுகிறார். உரிமை பெற்றவர்கள் எங்கிருப்பினும் அவர்களின் பெருமையை வாழ்த்துகிறார். உலகத்தின் எந்த மூலையில் நிகழும் மாற்றமாயினும் அது இந்திய மேன்மைக்கு உதவும் என்று கணித்திருக்கிறார். செய்திப் பரிமாற்றங்களுக்கு நவீனமான வசதிகள் இல்லாதபோதே இத்தாலியையும், பெல்ஜியத்தையும், ரஷ்யாவையும், ஜப்பானையும், சீனாவையும் பற்றிச் சரியாக ஆராய்ந்திருக்கிறார். மற்ற நாடுகளைப் பற்றிச் சிந்தித்த பாரதியார், அரசியல் அடிப்படையில் தேசிய 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/90&oldid=817321" இலிருந்து மீள்விக்கப்பட்டது