பக்கம்:பாரதியம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கங்கள், பொருளியல் புரட்சிகள் ஆகியவற்றைப்பற்றி எழுதியதோடு நில்லாமல் கல்வி, பண்பாடு, பெண்ணுரிமை, அறிவியல் முதலியவற்றைப் பற்றியும் எழுதுகிறார். “உலகத்து ராஜ்யங்களில் சுயேச்சா ராஜ்யம், ஜனப்பிரதியாட்சி, குடியரசு முதலியன எவையென்பதையும் எந்நாடுகளில் மேற்படி முறைகள் எங்ங்னம் மிசிரமாகி நடைபெறுகின்றன என்பதையும் எடுத்துக் காட்ட வேண்டும்..” என்று கூறும் பாரதி கல்விமுறைகளில் மற்ற நாடுகளிலிருந்து எவற்றைப் பின்பற்ற லா மென்றும் விளக்குகிறார். எல்லாரும் அமரநிலை எய்து நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்று கூறிய பாரதி, உலகம் எதனை இந்தியாவுக்களிக்கும் என்றும் காட்டுகிறார். பாரதியின் சர்வதேசச் சிந்தனைகளில் சுதந்திரம், சம வாழ்வு, முழுமையை நோக்கிய முயற்சி ஆகியவற்றுக்கு முதன்மை இருப்பதைப் புரிந்து கொள்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/91&oldid=817322" இலிருந்து மீள்விக்கப்பட்டது