பக்கம்:பாரதியம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் சுயசரிதை சுஜாதா பாரதியைப் பற்றிய நூல்கள் 1980 வரை கணக்கிட்டபடி முன்னூற்று எழுபது இருக்கின்றன. இவைகளில் யாராவது அவருடைய சுய சரிதையை சற்று ஆழமாகப் பார்த்திருக்கிறார்களா? சுயசரிதை என்று கவிதையில் எழுதப் போந்ததே ரொம்ப தைரியமான காரியம். அதுவே தமிழுக்கு மிகப் புதுசு. பாரதியாரின் சுயசரிதை கவிதை வெளி வந்த வருஷம் 1910 மாதா வாசகம்’ என்ற புத்தகத்தில் முதன் முதல் வெளியாகியிருக்கிறது. ஸ்வசரிதை - கனவு’ என்கிற தலைப்பில், எனவே சுயசரிதையை 1910க்கு முன்தான் எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையில் சொல்லும் சொந்த விஷயங்கள் பிள்ளைக் காதல், ஆங்கிலப் பயிற்சி, திருமணம், தந்தையின் வறுமை, தந்தையின் மரணம், தந்தையின் மரணத்தைப் பற்றிப் பேசும்போது: "தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது தரணி மீதில் அஞ்சலென் பாரிலர் சிந்தையில் தெளிவில்லை உடலினில் திறனுமில்லை உரனுளத்தில்லையால் மந்தர்பாற் பொருள் போக்கிப் பயின்றதாம் மடமைக்கல்வியால் மண்ணும் பயனிலை எந்த மார்க்கமும் தோற்றிலதென் செய்கேன் ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டினில்?” 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/92&oldid=817324" இலிருந்து மீள்விக்கப்பட்டது