பக்கம்:பாரதியம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு வேகமும் சோகமும் பொங்க எழுதியிருக்கும் வரிகளைப் படிக்கையில் பாரதி சுயசரிதையை அவர்தந்தை இறந்து போன 1898ம் ஆண்டிலேயே எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது. துக்கத்தின் அவசரம் ஆவேசம் வரிகளில் தெரிகிறது. 1898ல் அவருக்கு வயது பதினாறு. சுயசரிதையின் மற்றப் பகுதிகளைப் படிக்கும்போது தென்படும் முதிர்ச்சியும் காளிதாஸன்பாஸ்கரன் போன்ற சம்ஸ்கிருத ஆசிரியர்களின் நூல்களைப் பற்றி குறிப்பிடுவதாலும் ஸ்வசரிதை யை அவர் காசிக்குச் சென்று கற்றுவந்த பின்னே எழுதியிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. எப்படியும் அது முதலில் பிரசுரமானது 1910ல் தான். பாரதி கவிதைகளின் தொகுப்புக்களில் சுயசரிதை என்கிற பொதுத் தலைப்பின் கீழ் 'கனவு’ என்ற கவிதையும் அதைத் தொடர்ந்து 'பாரதி அறுபத்தாறு’ என்ற பகுதியில் பொது விஷயங்களைப் பற்றிச் சொல்லும் பாடல்களும் இடம் பெற்றிருக்கின்றன. இதன் காரணம் புரியவில்லை. 'பாரதி அறுபத்தாறில் மரணத்தை வெல்லும் வழி, (அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும்) கடவுள் எங்கே இருக்கிறார்? (கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்) மற்றும் குள்ளச்சாமி, கோவிந்த சுவாமி, மாங்கொட்டை சுவாமி, யாழ்ப்பானத்துச்சாமி என்று பலவிதமான குருக்களை சிலாகித்துப்பேசும் பாடல்கள், பெண்விடுதல, தாய்மாண்பு, காதலின் புகழ் (ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே) (ஆண்களைச் சாடும் உமன்ஸ் லிப்' வரிகள்) இப்படிக் கலந்து கட்டியாக இருக்கிறது. இது எப்படி சுயசரிதை என்பது புரியவில்லை. 1910ஆம் வருஷப் பதிப்பில் இந்தப் பாடல்கள் அனைத்தும் வெளியாயினவா என்று சந்தேகமாக இருக்கிறது. சுயசரிதை கனவுடன் அந்தப் புத்தகத்தில் பதினோரு பாடல்கள் இருந்ததாகத் தெரிகிறது. இந்தப் புத்தகம் பாரதியின் மூன்றாம் கீத நூல் என்று குறிப்பிடப்பட்டு தென்னாப்பிரிக்காவில் அச்சிடப்பட்டதாகவும் ஒரு செய்தி இருக்கிறது. (கீதம்) கனவு’ என்கிற கவிதை மட்டும் ஒரு தனி நூலாக வெளியிடப்பட்டதாகவும் அதனுடன் ஆறில் ஒரு பங்கு என்கிற சிறுகதையும் வெளிவந்ததாகவும் 1981ஆம் ஆண்டு சர்க்கார் குறிப்பு ஒன்று கூறுகிறது. இந்த இரண்டு நூல்களையும் பிரிட்டிஷ் அரசு தடை செய்துவிட்டது. 1912ம் வருஷம் அக்டோபர் எட்டாம் 91.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/93&oldid=817326" இலிருந்து மீள்விக்கப்பட்டது