பக்கம்:பாரதியம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேதி பாரதி இது குறித்து ஹிந்துவுக்கு ஆசிரியர் கடிதம் எழுதியிருக்கிறார்: I demand justice not in my own interest so much - for these book mean nothing to me from the point of view of money and famelasin the interest of what little of freedom of the pen is left to us in British India. If you prescrible love poems and Social interet stories on the ground that they issue from the pen of a suspected person you greatly exceed your limits. 1913ம் வருஷம் வரை தடைநீக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 1913ம் வருஷம் பாரதியின் டயரி குறிப்பொன்று தடை இன்னும் நீக்கப்படாததைப் பற்றி பேசுகிறது. (ஏதாவது செய்ய வேண்டும்) சுயசரிதை என்று பாரதி ஒரிஜினலாக குறிப்பிட்டது அவரது கனவு என்கிற கவிதையைத்தான் என்று தோன்றுகிறது. இதை சர்க்கார் தடை செய்த காரணம் புரியவில்லை. ஒரு வேளை ஆங்கிலக் கல்வியை ஒரு பகுதியில் காட்டமாகச் சாடுவது காரணமாக இருக்கலாம். இப்போது கனவு’ என்கிற கவிதையைப் பார்ப்போம். 'பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவே” என்ற பட்டினத்தார் வரியின் முன்னுரையே கவிதையின் ஏக்கத்தையும் சோகத்தையும் நோக்கமாக நிலைநாட்டிவிடுகிறது. வாழ்வு முற்றும் கனவு’ என்றுதான் தொடங்குகிறார் (தலைப்பின் காரணம்?) சின்ன வயசில் அப்பாவுக்கு ரொம்ப பயந்திருக்கிறார். ரொம்ப தனியாக இருந்திருக்கிறார். "தந்தை விதிப்பினுக் கஞ்சியான் வீதியாட்டங்கள் எதிலும் கூடிலன் தனியனாய் தோழமை பிறிதின்றி வருந்தினேன்” அப்போது உற்ற பிள்ளைக் காதலைப்பற்றி பேசும்போது கொஞ்சம் நெகிழ்கிறார். அதையும் கனவு என்றுதான் சொன்னாலும் சின்ன வயசில் காதலித்த பெண்ணை வருணிக்கும்போது கனவு என்று நினைக்கத் தோன்றவில்லை. 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/94&oldid=817327" இலிருந்து மீள்விக்கப்பட்டது