பக்கம்:பாரதியம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளுக்கு ஒன்பது வயசு. அவர் கண்ணுக்கு சகுந்தலை போல இருந்தாளாம். ஒன்பது வயசு என்பது எவர்க்கும் வியப்பாக இருக்கும் என்ன செய்வது? என்மேல் தப்பு. அன்பெனும் பெருவெள்ளம் என்னை இழுத்தால் பிழைக்க முடியுமா? ஆனானப்பட்ட முனிவர்களையே வென்ற வில்லுக்கு முன் ஏழைக்குழந்தை என்ன செய்வேன்? சின்ன மான் போல இருந்தாள். காமன் அம்புகள் என் உயிரைக் கண்டன. குமரகுருபரன், ஞான சம்பந்தன், துருவன் போன்ற பாலகர்கள் கடவுளர் மீதுதான் பக்தி கொண்டனர். நானோ சின்ன வனாக இருக்கும்போது 'மதன தேவனுக்கு என்னுயிர் நல்கினன் அவர்கள் வான்புகழ் பெற்றனர். நான் பெற்றதை அப்புறம் சொல்கிறேன். அவள் தண்ணிர் எடுத்து வருவாள். புன்னகை சுடர் விசிச் செல்லும் வேளை தினந்தோறும் காத்திருந்து அவள் போகிற வழி முற்றிலும் கண்களால் பின்னழகைக் கவனித்து அதிலேயே நாட்களைக் கழித்தேன். எப்போதாவது வதனம் திரும்பினால் "புலனழிந்து புத்துயிர்” எய்துவேன். இப்படிப் பார்ப்பது விலங்கியற்கை என்ன செய்வது? விலங்கியற்கை இலையெனில் யாமெலாம் விரும்பு மட்டில் விண்ணுறலாகுமே கானகத்துப் பறவைகள் போலவும் வானகத்து இயக்கர் இயங்கிகள் போலவும் மையல் கொண்டு அந்தப் பெண்ணுடன் 'தெய்வ நாட்கள் சில கழித்தேன் ஒரு நாள் அவளைச் சந்தித்ததை மிக அழகாகச் சொல்கிறார் - - “ஆதிரைத் திருநாள் ஒன்றினில் சங்கரன் ஆலயத்து ஒரு தண்டபந்தன்னில்யான் சோதி மானொடு தன்னந்தனியாய் சொற்கள் ஆடியிருப்ப மற்றங்கவள் பாதி பேசி மறைந்து பின்தோன்றித் தன் பங்கயக்கையில் மைகொணர்ந்தே" “ஒரு சேதி நெற்றியில் பொட்டு வைப்பேன்’ என்றாள், திலதமிட்டனள். செய்கை அழிந்தேன். இவ்வளவு விவர்மாக வர்ணிக்கப்படும் காதல், கனவு என்றோ கற்பனை என்றோ கூற முடியவில்லை. இந்தக்காதல் என்ன ஆயிற்று? 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/95&oldid=817329" இலிருந்து மீள்விக்கப்பட்டது