பக்கம்:பாரதியம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையார் நெல்லைக்குச் சென்று கல்வி பயில் என்று அனுப்பி விட்டார். அந்தக் கல்வி அவருக்குப் பிடிக்கவே இல்லை. சிங்கக்குட்டியைப் புல்தின்னச் சொன்னது Guលា பார்ப்பானை வாணிகம் செய்யச் சொன்னதுபோலவும் அருவருப்பாக இருந்தது. ஆங்கிலக் கல்வியில் அவருக்கு ஈடுபாடே இல்லை. இவர்கள் எல்லாம் பன்னிரண்டாண்டு கணிதம் பயில்வார்கள். வானத்தில் ஒரு நட்சத்திரத்தின் நிலை தெரியாது. ஆயிரம் காவியங்கள் கற்பார்கள். ஆனால் கவியுள்ளம் என்பதைத் தெரியாதவர். கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை, புனைந்ததும் உம்பர்வானத்துக் கோளையும் மீனையும் ஒர்ந்து அளந்த தோர் பாஸ்கரன் மாட்சியும்... சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்பிறை செய்ததும், இந்த ஆங்கிலம் படிப்பவர்களுக்கு என்ன தெரியும்? என் தந்தை, எனக்கு நல்லது செய்யத்தான் அனுப்பி வைத்தார். ஆனால் அது ஏதிலார் தரும் கல்விப்படுகுழி இதனால் அப்பாவுக்குச் செலவு ஆயிரம். எனக்கு தீது பல்லாயிரம். எந்தவித நலமும் ஏற்படவில்லை என்பதை நாற்பதாயிரம் கோவிலில் சொல்வேன். ஏதோ பூர்வ சன்ம புண்ணியத்தாலும் பாரத அன்னையின் அருளாலும் அந்த இருட்டில் ஆழ்ந்திடாமல் திரும்பி ஒருவாறு பிழைத்து வந்தேன். அத்தனை கோபம் ஆங்கிலக்கல்வி மேல். அடுத்தது அவருடைய திருமணத்தைப்பற்றி அதிக உற்சாகமில்லாமல் தான் பேசுகிறார். ‘நினைக்க நெஞ்சுருகும் பிறர்க்கு இதை விவரிக்க நாக்கூசும் என்கிறார். திருமணத்தில் அவருக்கு இஷ்டமில்லை என்று தெரிகிறது. "நாடுங்கால் ஓர் மனமற்ற செய்கையை நல்லதோர் மணமாம் என நாட்டுவார் கூடுமாயில் பிரமசரியம் கொள். கூடு கின்றிலதெனில் பிழைகள் செய்து ஈடழிந்து நகர வழிச் செல்வாய். யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்’ எதனால் திருமணத்தின் மேல் இந்த வெறுப்ப? “ஆங்கோர் கன்னியை பத்துப் பிராயத்தில் நெஞ்சிடை ஆழ ஊன்றி வணங்கினன் ஈங்கோர் கன்னியை பன்னிரண்டாண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன் தீங்கு மற்றிதில் உண்டென்றறிந்தவன் 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/96&oldid=817331" இலிருந்து மீள்விக்கப்பட்டது